பக்கம்:கவி பாடலாம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை வகை - 9 /

வெண்டளை அமைய வேண்டும். இது மிகவும் முக்கிய மானது. ஆனால் முதலடியின் ஈற்றுச் சீருக்கும், அடுத்த அடியின் முதற் சீருக்கும் இடையே வெண்டளை இருக்க வேண்டியதில்லை. நேரை முதலாக உடைய பாட்டில் இங்கும் வெண்டளை இருக்கும்.

வெண்டளை மேலே சொன்ன வகையில் வந்து, ஐந்து சீர்களில் ஈற்றுச் சீரில் மட்டும் விளங்காய்ச் சீர் வந்து அமைந்தால் எழுத்துக் கணக்குச் சரியாக இருக்கும். எழுத்தை எண்ணிப் பாட வேண்டாம். முன் சொன்ன இலக்கணம் இருந்தால் நிச்சயமாக எழுத்துக் கணக்குத் தவறாமல் இருக்கும்.

“நாளென் செயும்வினை தானென்

செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென்

செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந்

தண்டையுஞ் சண்முகமும் தோளுங் கடம்பு மெனக்குமுன்

னேவந்து தோன்றிடினே.”

இந்தப் பாட்டில் நாளென், தாளென், கோளென், கூற்றென், தாளுந், தோளுங்-என்பவை தேமாக் சீர்கள், சிலம்புஞ், கடம்பு-என்பன புளிமாச் சீர்கள். இவற்றின் முன் நிரை வந்துள்ளது. செயும்வினை, செயுமெனை, செயுங் கொடுங், செயுங்கும, சதங்கையுந், மெனக்குமுன் என்பன கருவிளச் சீர்கள். தண்டையும் என்பது கூவிளச்சீர். இவற்றின் முன் நேர் வந்தது. னேவந்து என்பது காய்ச்சீர். இதற்கு முன்னும் நேர் வந்தது. இவ்வாறு வெண்டளை அமைந்தது காண்க. ஒவ்வோரடியின் ஈற்றுச் சீரும் விளங்காய்ச் சீராக வந்திருக்கிறது. நாடிவந்த (கூவிளங்

&: Lif.-7 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/98&oldid=655938" இலிருந்து மீள்விக்கப்பட்டது