பக்கம்:கவி பாடலாம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கவி பாடலாம்

காய்),ரேசரிரு (கூவிளங்காய்), சண்முகமும் (கூவிளங்காய்), தோன்றி.டினே (கூவிளங்காய்) என்பவற்றைக் காண்க. கருவிளங்காயும் வரலாம். இறுதி ஏயில் முடியும்.

கந்தர் அலங்காரம் முழுவதும் கட்டளைக் கலித் துறையால் ஆனது. கோவை நூல்கள் யாவுமே கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை. அவற்றைப் படித்துக் கட்டளைக் கலித்துறை பாடக் கற்றுக் கொள்ளலாம்.

கலித்துறைகளில் ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

18. விருத்த வகை

ஒவ்வொரு வகைப் பாவுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என்று மூன்று இனங்கள் உண்டு என்பதை முன்பே தெரிந்து கொண்டோம். அவற்றில் கலித்துறையைப் பற்றி யும் ஆசிரிய விருத்தத்தைப் பற்றியும் அறிந்தோம். இனி மற்ற விருத்தங்களின் இலக்கணத்தையும் கவனிக்கலாம்.

வெளிவிருத்தம்

வெண்பாவின் இனமாகிய விருத்தத்தை வெண்பா விருத்தம் என்று சொல்வதில்லை; வெளி விருத்தம் என்பார்கள். மற்றவை அவ்வப்பாவின் பெயர்களோடு இணைந்திருக்கும்; ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் என்று அவை பெயர் பெறும்.

வெளி விருத்தம் ஐந்து சீர்களை உடைய அடிகள் மூன்றோ நான்கோ பெற்று வரும். இதில் முக்கியமான

மு )/ (op

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/99&oldid=655939" இலிருந்து மீள்விக்கப்பட்டது