உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி

87


டுச்சு. சம்சாரிக பட்ட கடனை ஞாயமாப் பார்த்தா... சர்க்கார் ஏவாரிக்கிட்டே வசூல் பண்ணனும். பண்ண முடியாட்டா-விட்டுட்டுவிரலைச் சூப்பிட்டுப் போகணும்.. ஏழை சம்சாரிகிட்டே வந்து மீசை முறுக்குறது, என்ன ஞாயம்?

முச்சாமியின் மனசில் நெருப்பாக நினைவுகள் ஜுவாலை விட்டெரிந்தன.

வெறும் தாட்டுகளைச் சுருட்டித் தலையில் வைத்துக் கொண்டு, பஸ் ஏறினார் முச்சாமி.

அரிவாள்கம்பும் மீசையுமாய் நெருங்கி வருகின்ற சர்க்கார்.... களை சுரண்டியுடன் அந்த வருஷமும் காட்டுக்குப் போகும் மகள்-

சுற்றி மொய்க்கும் யதார்த்தம் அவரைச் சுட்டது.

போரில் சகலத்தையும் இழந்து நிராயுதபாணியாக நின்ற லங்கை வேந்தன் கலங்கினானே... அதைவிடவும் கொடிய கலக்கம், கடன்பட்ட முச்சாமியின் நெஞ்சத்தைக் கலக்கியது.

கடன் அடைஞ்சாகணும், வழி நடந்தாகணும். எப்படியும் மகளுக்கு ஒரு நல்லது செய்யணும். அது எப்படி?

கேள்விகள் நெஞ்சைக் கவ்வி, பாரமாகித் தொங்கி இழுக்க, அந்த லங்கேஸ்வரன் குமுறலுடன் ஊருக்குள் நுழைந்தார்.


- செம்மலர், 1982 மார்ச்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/100&oldid=1810306" இலிருந்து மீள்விக்கப்பட்டது