உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

காகிதம்


விலகிய என் காதலன். கண்ணைத் திறக்க முடியாமல் பரவசத்தில் கிடந்த என்னுடன் இன்னும் சரசவிளையாட்டுப் பேச்சில் சிணுசிணுக்கிற சிறு தூறல்கள். பிரிய மனமில்லாமல் விட்டுவிட்டு ஓடிவந்து தழுவிக் கொள்கிற தூவானம்!

காதலன் போய்விட்டான். அவனது ஈரச் சுவடுகளை இழக்க விரும்பாமல் இன்னும் என் இலைகளில் ஏந்திக்கிடக்கிறேன். அவன் முத்து முத்தான முத்தங்கள். என் இலைகளில் ஈர ஒளித் துளிகளாக இன்னும் தொங்கி நிற்கின்றன! அசையக்கூட விரும்பாமல்... அப்படியே அடித்துப் போட்ட மாதிரி சலனமற்று மயங்கிக்கிடந்தேன்.

-வந்து நின்ற தென்றல் தோழியின் குறும்புச் சீண்டல். அந்தக் குளிர்ச் சீண்டலின் மென்மையான கேலியில் அதிர்ந்து போனேன்! அந்தத் திடுக்கிடலில் ஆடைகளைச் சுருட்டிக் கொண்டு பதறிப் பதைத்து எழ முயன்றபோது-

பொலபொலவென்று உதிர்ந்த என் நாயக ஈரச் சுமைகள்... ஒளித் துளிகள்!

என் காதலனின் வெறியாட்டத்தில் அரண்டு போய் வீடுகளுக்குள்ளும், தாழ்வாரங்களிலும் ஒதுங்கி நின்ற மனிதர்கள் வெளியே வந்தார்கள்!

பெய்த மழையில் திரண்டோடிய தெருத் தண்ணீர், ஊர்ப் புழுதியின் எல்லா சுவடுகளையும் கழுவித் துடைத்திருந்தது. ஈர நெகிழ்வில் குழைந்திருந்தது!

அழுக்கு உடைகளும் சவரம் செய்யாத முகமுமாகத் தலையில் துண்டைப்போட்டு மூடிக்கொண்டு வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/103&oldid=1810466" இலிருந்து மீள்விக்கப்பட்டது