மேலாண்மை பொன்னுச்சாமி
93
போய்ட்டாரா? இனி என்னைக் காப்பாத்தறது யாரு? எனக்கு யாரு நாதி? நா நாதியத்துப் போய்ட்டேனா..?
எனக்கு அழுகை அழுகையாக வந்தது. தலைவிரிக்கோலமாக நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறணும் போலிருந்தது. துக்கம் துக்கமாக வந்தது.
ரூல் தடியளவுதான் அப்ப என் கால், ஒரு குடையளவுக்குத்தான் என் உடம்பு-அப்ப நான் பூக்கக்கூட செய்யவில்லை.
அப்ப வந்து ஒருவன் என் பிஞ்சு விரல்களை ஒடிக்க நினைத்து...என்னை வளைத்தான்.
“அது எவண்டா... மரத்தை வளைக்குறது?” அதட்டலாக சின்னக்கனி நாடார். அவர் முகமெல்லாம் கோபக் கடுப்பு.”
“சும்மாதான்..பல்குச்சி ஒடிக்கணும்..”
“பல்குச்சியா? மடையா... இந்தச் சின்னக்கன்னுலே போயா ஒடிக்கிறது? பச்சைப்புள்ளே விரலை ஒடிக்கறதுக்கு ஒனக்கு எப்படிடா மனசு வர்றது?”
“என்ன, மாமா... பல்குச்சி ஒடிக்கிற சின்ன சிஷயத்துக்கு, பெரிய பெரிய வார்த்தைப் பேசுறீரு!”
“பெரிய வேப்ப மரத்துலே போய் ஒடி, யாரு வேண்டாம்னு சொன்னாக...? இதுலே ஒடிக்கக் கூடாது.”
சின்னக்கனி நாடார் எனக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றுவார். அவ்வப்போது வந்து என்னைத் தடவிப் பார்ப்பார்! என் சொறசொறப்பான திரேகத்தில் அவரது மென்மையான ஸ்பரிசம். எனக்கு ஒரே குதூகலம்...