94
காகிதம்
சந்தோஷம்! தினம், தினம் வருட மாட்டாரா என்று ஏங்குகிற அளவுக்கு சுகமான தடவல்!
அவரது பார்வை பிடிக்கும். பாசம் பிடிக்கும்.. அன்பு பிடிக்கும்.. அவரை மாதிரியான மனிதர்கள் எல்லோருமே எனக்குப் பிடிக்கும். மனிதர்கள்தான் என்னைப் பயன்படுத்தி, என் பிறவிப் பயனையே எனக்கு உணர்த்துகிறார்கள்!
அப்ப நான் கொஞ்சம் வளர்ந்து விட்டேன்.மார்கழி, தை மாசம் எனக்குக் குதூகலமான மாசங்கள். நிறையக் கொழுந்துகள் கண் விழிக்கும். பங்குனி பிறந்துவிட்டால், கொத்துக் கொத்தாகப் பூப்பேன்; என் பூ வாசம் கம் மென்று பரவும். பூப்பூத்து விட்டால் போதும். எங்கிருந்து தான் வருமோ- சிற்றெறும்பு, கூட்டம் கூட்டமாக வரும். அதுகளுக்கு என் பூ மேல் ஒரு மயக்கம்! என் காயைத் தான் யாரும் சீந்த மாட்டார்கள்! கசப்புக்கே என் காய்தான் உதாரணம். என் காயையும் சில சிறுமிகள் பறிப்பார்கள்! காயின் தோலை விரல் நகத்தால் கிழிப்பார்கள். உள்ளிருக்கும் திரவத்தில் ஊசி மாதிரியான குச்சியால் தொட்டுத் தொட்டு அவர்களது சின்னக் கைகளில் பெயர் எழுதுவார்கள்.
“அய்ய்... பச்சைக் குத்திக்கிட்டேன்” என்று சிறுமிகளின் குதூகலம் என்னையும் பற்றிக்கொள்ளும்!
இப்ப எனக்கு இருபது வயதாயிற்று. என் பிரமாண்டமே எனது அழகு. எல்லோருமே அண்ணாந்து பார்ப்பார்கள்!
“பெரிய மரமாயிருக்கே... ஒரு கொழையோ குச்சியோ ஒடிக்கலே போலிருக்கு. படு லட்சணமா இருக்கே”