உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி

95


“சின்னக்கனி நாடாரு கவனிப்பு. யாரும் கை வெச்சிர முடியாது.”

“தூர் ரொம்ப அகலமாயிருக்கே. ஓர் ஆள் சேர்ந்து கட்டினாலும், கட்ட முடியாது போலிருக்கு.”

“ஆமா... அவரு ஆள் முறுக்காயிருந்து வெவசாயம் பண்ணுன காலத்துலே வெச்ச மரம். இப்ப ஆள் தளர்ந்துட்டாரு. காடு - கரை, மாடு-கன்னு எல்லாத்தையும் மகன்கிட்டே ஒப்படைச்சிட்டு ஓய்ஞ்சி உக்காந்துட்டாரு. ‘அந்தா, இந்தா’னு இருவதுவருஷம் இருக்கும்லே?”

“ஒரு கோணல்மாணல் இல்லாம, நேரா நிமிர்ந்து நிக்குது.. தூரு வெட்டி ஆறப்போட்டு.. பலகையா அறுக்குறதுக்குத் தோதான மரம்...”

என் அழகே எனக்கு எமன். பார்க்கிறவர்களுக் கெல்லாம் வாயில் எச்சில் ஊறியது. ‘வெட்டணும், வெட்டிரணும்’ என்று அலை பாய்ந்தார்கள். எனக்குள் நடுக்கம். மரண நிழலின் பயங்கரம்.

ரெண்டு தடவை எனக்கு விலை பேசிவிட்டார்கள். கோடாரி, கடப்பாரைகளோடு எமன், காலன், தூதன்களாக வந்துவிட்டார்கள். நல்லவேளை! சின்னக்கனி நாடார் வந்து என்னைச் சேர்த்துக் கட்டிக் கொண்டார்.

“என்னை வெட்டிட்டு இந்த மரத்தை வெட்டுங்க..” என்று வைராக்கியமாகப் போராடினார். அவர் மகனுக்கு, அய்யாமேல் எரிச்சல் என்றால்.. மகா எரிச்சல்.

“பாடுபட்டுச் சம்பாரிச்ச சொத்துப் பத்தெல்லாம்வுட்டுக் குடுத்தீரே... இந்த வேப்பமரத்தை மட்டும் தர மாட்டேங்கிறீரே.. ஏன்ய்யா..? என்னய்யா.?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/108&oldid=1810474" இலிருந்து மீள்விக்கப்பட்டது