98
காகிதம்
சிதறல்கள். கூடார வீடு போன்ற என் திரேகமே நடுங்கிக் குலுங்குகிறது. என் மனம் மரண வேதனையில் தவிக்கிறது. எனக்கான தவிப்பு மட்டுமல்ல.
எனக்காக அல்ல... என்னைப் படைத்த மனிதர்களுக்காக, பிறவிப் பயனை எனக்கே உணர்த்திய என் ஞானத் தந்தைகளுக்காக. நீரும் பாதுகாப்பும் தந்து உயிர் வளர்த்த ஆத்மாவுக்காக, ஆசையும் பாசமுமாக என்னைப் பார்த்து, தொட்டு வருடிய இதயங்களுக்காக.
“மழையில்லாம நீங்க தவிக்கக் கூடாதே... என்னைப் பெத்த அய்யாமார்களே... நல்ல காத்து இல்லாம நீங்க நாசமாயிடக் கூடாதே... மரங்களை வெட்டி நாசமாக்கிட்டா, மரங்களுக்கு நட்டமில்லே... உங்களுக்குத்தான் நட்டம். உங்க உசுருக்கு நட்டம், உடம்புக்கு நட்டம். எதிர்கால வாழ்வுக்கு நட்டம். அய்யாமாரே.. என்னைக் காப்பாத்துங்க. என் மூலமா உங்களையும் காப்பாத்திக்கோங்க... அய்யாமாரே... அப்பன்மாரே... என்னைப் பெத்த தங்கப் பெட்டிகளா...”
என் அலறல் யாருக்கும் கேட்கவில்லையே.. ஐயோ... என் ஆத்ம துடிப்பு. காலத்தின் குரல் என்று புரியவில்லையே... ஐயையோ... கோடாரி வெட்டு மாறி மாறி விழுதே.
ஒரு சங்கு ஊதுகிற சத்தம்... திடுக்கிட்டு விழித்து விட்டேன். என்னைச் சுற்றி குழி வெட்டவில்லை. கோடாரி வெட்டும், விழவில்லை. ‘சின்னக்கனி’ நாடார் செத்துப் போனாரே...என்ற பயத்தில் வந்த கெட்ட கனா...
சங்குச்சத்தம் தொடர்ந்து, இளவட்டங்களின் ஆரவாரக் கூச்சல். அலங்கரிக்கப்பட்ட தேரில் சின்னக்கனி