மேலாண்மை பொன்னுச்சாமி
99
நாடாரை வைத்துத் தூக்கி வருகிறார்கள். அவரது கடைசிப் பயணம்.
என்னைக் கடக்கிற ஊர்வலம். நாடிக் கட்டோடு உட்கார்ந்திருக்கிற நாடார்..அழுது கதறுகிற என்னை ஏக்கமாகத் திரும்பிப் பார்ப்பதைப் போல் ஒரு பிரமை.
என்னால் தாங்க முடியவில்லை. என் கிளைக்கைகளும் இலையாடைகளும் வாடைக் காற்றுக்குக் கூத்தாட மாரடித்துக் கதறினேன். “ஐயோ..என் ராசாவே. என் அய்யாவே..”
ஒரு வாரம் ஆயிற்று. மண்வெட்டி, கடப்பாரை, கோடாரியோடு நாலு பேர் வந்தனர் என்னிடம். என்னுள் படபடப்பு..பயப் படபடப்பு. என் கடைசி நேரம் நெருங்கி விட்டது. மரணதேவனின் சுவாச உஷ்ணம் என்னைத் தகித்தது.
என்னைக் காப்பாற்ற நாடார் இல்லை. கட்டிச் சேர்த்துப் போராட ஆத்மா இல்லாத சூன்யச் சூடு. வெறுமைப் பகீர்...
அப்போது...
மொட்டை அடித்த தலையோடு அவரது மகன். அண்ணாந்து என்னைச் சோகம் ததும்ப பார்த்தான் கண்ணில் ஒரு நீர்க் கசிவு. அய்யாவையே என்னில் பார்த்தானோ-
“மரத்தை வெட்ட வேணாம்”
“எதுக்கு..?”
“காடுகரை குடுத்த எங்க அய்யாவை கடைசிக் காலத்துல நானும் புள்ளைகளும் நல்லபடியா நடத்தலே..