இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100
காகிதம்
புத்தியைக் கடன் குடுத்துட்டேன் அவரைத் தான் கௌரவமா காப்பாத்த முடியலே... அவரு உயிரா நினைச்ச இந்த மரத்தையாச்சும் காப்பாத்தனும். ஏன்னா இது அவரோட உயிர். இது, அவரேதான்..”
“நாங்க குடுத்த அட்வான்ஸ்.”
“பத்து நாள்ல திருப்பித் தர்றேன்.”
எனக்குள் பரவசம். மழை நாயகன் வந்து தழுவிய மாதிரி இன்பப் பரவசம், சின்னக்கனி நாடார் சாகவில்லை, சாகமாட்டார்.”
20.04.98 ஆனந்தவிகடன்.