உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

காகிதம்


“என்னடா?”

“ரேடியோ பாடுற வீட்டுக்கு நாம போவமா?”

“எதுக்குடா?”

“சாப்புடத்தான்.”

“இந்த வீட்லே பந்தி இல்லேப்பா.”

“ஏம்மா..?”

“நிச்சயதார்த்தம் மட்டும்தான் பண்ணப் போறாக. கல்யாணத்தன்னைக்குத்தான் பந்தி வைப்பாக.”

அம்மாவை நம்பாமல் பார்த்தான் அண்ணாந்து. ‘ரேடியோ படிச்சா... சோறு இல்லாமலா?’ என்று சந்தேகமாக யோசிக்கிற ராமசாமி, ‘அம்மா பொய் சொல்றாளோ’ என்ற நமைச்சல். அம்மாவின் கண்ணையே ‘துருதுரு’வென துருவித் துருவிப் பார்த்தான்.

அப்போது-

நாலு பெண்கள், நல்ல பூப்போட்ட கலர்ச்சேலை உடுத்தி... சீவிச் சிங்காரித்து... பொட்டு வைத்து.. ‘பளிச்’ சென்று வந்தார்கள். வீடு வீடாகச் சொல்லி அழைக்கிறார்கள். நிச்சயதார்த்த விழாவுக்கு வரும்படியான ஊர் அழைப்பு.

பக்கத்து வீட்டில் ‘தப தப’வென்று நுழைகின்றனர். வீட்டுக்காரர்கள் தடபுடலாக உபசரிக்கின்றனர்.

“எத்தே... எத்தே..”

“யாரடியம்மா? அடடே..வாங்க வாங்க..”

“எங்க வீட்லே தங்கச்சிக்கு நிச்சயம் பண்ணப்போறோம். வந்துருங்க.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/117&oldid=1810591" இலிருந்து மீள்விக்கப்பட்டது