உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி

105


“எந்நேரத்துக்கு?”

“சாயங்காலம் பொழுதடைஞ்சு ‘கரு, கரு’ன்னு மயங்குற நேரத்துக்கு, ஏழு மணிக்கு.”

“அப்படியா? நல்ல காரியம். காலாகாலத்துலே நடக்கட்டும். நா வந்துருதேன்.”

“வந்துருங்க, அத்தே.”

“வராம இருப்பேனா? நம்ம புள்ளைக்கு மாலை பூத்து வருதுன்னா... எம்புட்டுச் சந்தோஷம். நா வராம இருப்பேனா..? வாரேன்..”

அங்கே சிரிப்பும் மகிழ்ச்சியுமாக பேச்சு கல கலத்துக் கொண்டிருந்தது. வாசலில் நிற்கிற வடிவு. அவளது கால்மாட்டில் நிற்கிற ராமசாமி..

“ஏம்மா_”

“என்னய்யா கண்ணு?”

“அந்த ஆச்சியை கூப்புடுதாகளே... நம்மளையும் கூப்புடுவாகளா?”

ராமசாமி குரலில் ஒரு துள்ளல். கூப்பிடணும் என்று ஆசைப்படுகிற மனசின் பரபரப்பு. ஆவல் பறப்பான அவனது ரெக்கையடிப்பு. வடிவுக்கு வாயடைத்துப் போயிற்று. என்ன சொல்ல? எப்படிச் சொல்ல?

நெஞ்சடைத்துக் கொண்டு வந்தது.

அந்த வீட்டைவிட்டு வெளியேறி வருகிற அந்தப் பெண்கள். இந்த வீட்டை நெருங்குகின்றனர். வீட்டு முற்றத்தில் நடக்கின்றனர்.

ஆவல் வெளிச்சம் கண்ணில் மின்ன அவர்களையே பார்க்கிற ராமசாமி. அம்மா சேலையைப் பற்றியிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/118&oldid=1810592" இலிருந்து மீள்விக்கப்பட்டது