உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

காகிதம்


அவனது உள்ளங்கையின் மெல்லிய நடுக்கத்தில் உணர முடிகிற அவனது மனசு. முற்றத்தில் நடக்கிற அந்தப் பெண்கள். நிமிர்ந்து கழுத்தைத் திருப்பி இவளைப் பார்க்கின்றனர். ஏறிட்டுப் பார்க்கிற பார்வையில் தெரிகிற அம்மா, தர்மசங்கடமான புன்முறுவலோடு கடந்து போகிற அவர்கள், அசட்டு முறுவல்.

மங்களகரமான வீட்டுக்கு அமங்கலியை எப்படி அழைப்பார்கள்?

‘வா’ என்று அழைக்கவில்லை. அடிமனசில் சப்பென்று அறைகிற ஏமாற்றம். கடந்துபோகிற அவர்கள் எதையோ பறித்துக் கொண்டு போகிற மாதிரியோர் வேதனை.

இந்த நிராகரிப்பு. புறக்கணிப்பு. கல்லெறிபட்ட குருவியாகத் துடிக்கிற மனசு. வடிவுக்குள் தவிக்கிற தவிப்பு. அவமானப்படுத்தப்பட்ட அவஸ்தை. இழிவுப்படுத்தப்பட்ட கொதி உணர்வு.

‘ஒழக்கரிசி சீவன், அந்த ஆளு. அவரு சாகப்போய் எம்புட்டு மரியாதை போயிருச்சு? பொட்டு, பூ, போச்சு, ஆதரவு, அரவணைப்பு போச்சு. மனுச மக்க மத்தியிலே நிக்குற உரிமையுமில்லே. போயிருச்சு? ‘நல்லது’ எதுலேயும் நாயகமா இருக்க முடியலியே... அட, ஓரத்துல ஒதுக்கத்துலே கூட ஒண்டி நிக்க வழியில்லாமப் போச்சே..’

அவலப்புலம்பலாக அழுது நீள்கிற சோக நினைவுகள்.

“எம்மா..”

“ம்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/119&oldid=1810593" இலிருந்து மீள்விக்கப்பட்டது