110
காகிதம்
எல்லா வேலைகளும் றெக்கை கட்டிக்கொண்டு பறந்தன. அவள் கைகளில் ஒரு துரித கதி. பரபரப்பு.
‘வெளியே ஓடைக்குப் போகணுமே’ என்ற நிஜம் நினைவில் வந்தது. அதில் முட்டிக்கொண்ட மாதிரி திகைத்துத் தேம்பினாள்.
வீட்டுக் கதவைத் திறந்து, வெளியே தலைகாட்டுவதற்கு முன்பு, ரொம்ப யோசிக்க வேண்டும். எதிர் வீட்டுக்கு அடுத்த ரெண்டாவது வீட்டுக்காரன், உறங்கி முழித்தவுடன் செம்புத் தண்ணீரோடு முகம் கழுவ வருவான். அவன் பார்வையில் இவள் தலை தட்டுப்பட்டு விடக்கூடாது.
இவள் முகத்தைப் பார்த்துவிட்டால்... அம்புட்டுத்தான். தாட்சண்யமில்லாமல் வெறுப்பைக் கக்குவான். அசூசையில் முகம் குரூரமாகக் கோணலாகும். சப்பழிந்த முட்டை ஓடாகக், கண்கள் கோபத்தில் குறுகிச் சிறுக்கும்.
கூச்சநாச்சமில்லாத அடாவடித்தனமாக முணு முணுப்பான். “வெறுவாய்க் கெட்ட கழுதை! விடிஞ்சவுடனே வெறும் மூஞ்சீயை கொண்ணாந்து காட்டணுமாக்கும்? ச்சேய்... இன்னிக்கு பொழுது வெளங்குன மாதிரித்தான்.”
அக்கினித் துண்டுகளான வார்த்தைகள். ஊசி ஊசியாகப் பாய்ந்து சொருகும். அவமானம் அவளைப் பிடுங்கித்தின்னும். ‘நாக்கைப் புடுங்கிக்கிட்டு செத்துத் தொலையலாமே’ என்று மனசு கிடந்து கசக்கும்.
புருஷனை நானா கொன்றேன்? தாலியில்லாமல் போனதற்கு நானா பொறுப்பு? வெறும் நெற்றியும், வெறும் கால்விரலும், பூவில்லாத வெறும் கூந்தலுமாய்