118
காகிதம்
நீல டவுஷர் சாயம் போய்...நூல் நூலாய்த் தொங்கியது. அழுக்கான சீசன் துண்டு தலையில் வட்டக்கட்டாகக் கட்டப்பட்டிருந்தது. இன்னும் பூனை ரோமம் அரும்பாத பிஞ்சுப் பருவம்.
இவனது முதுகுக்குப் பின்னால்..
கோலாகலச் சத்தம். பொங்கல் வைத்து மொட்டை எடுத்து, காது குத்த சாதிசனத்தோடு வந்தவர்களின் மகிழ்ச்சியான ஆரவாரக் கூச்சல்.
“அடுப்பை மூட்டுங்கடா.”
“அரிசியை அரிச்சுப் போடுங்க”
“பொங்கப்பானையிலே சந்தனம் பூசி... குங்குமம் வை”
ஏகமாய் மனிதக் கூச்சல், உத்தரவிடுகிற - எகிறுகிற- கிண்டலடிக்கிற வெறுமனே கெக்கலிக்கிற சத்தங்கள்.
இவன் அந்தப்பக்கம் திரும்பவேயில்லை. மனசெல்லாம் கிடந்து கசக்கிறது. சத்தமுகங்களோடு மனசுக்குள் தெரிகிற அந்தக் கோவில், கோலாகலம், இவனுள் வெறுப்பனலை அலை அலையாக எழுப்புகிறது.
காட்டுக்கோயில், பெரிய கோயில், மூன்றாள் உயரத்துக்கு கல்கோட்டைச்சுவர். அதற்கும் மேலே நெஞ்சையும், தலையையும் பயங்கரக் கண்ணையும், மீசையையும் காட்டிக் கொண்டு, சாட்டையேந்திய, ....சத்தியான வீரபாண்டிச் சாமி.
வாசல்படியில் நாலு பேர் படுக்கலாம். அத்தனை நீள
அகலம்.