உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

காகிதம்


அய்யாவிடம் சண்டை போட்டான். அடம்பிடித்தான். ஆடு மேய்க்கப் போவதாக ஆலாய்ப் பறந்தான். பாவம், அய்யா!

நாயக்கர் வீட்டில் சாணி, சகதி அள்ளி, பழைய கஞ்சியை மாட்டுத்தொழுவத்தில் வைத்துக் குடிக்கிற அய்யா. ‘ஆடுமேய்க்கப் போகணும்’னு ஆலாய்ப் பறக்கிற மகனின் அக்கறையில் குளிர்ந்து போன அய்யா. பூரித்து மகிழ்ந்த அய்யா.

அரைப்பரீட்சை முடிந்த கையோடு ஆட்டுக் கம்பைத் தூக்கிவிட்டான் சில்லாண்டியும்.

கோவிந்தன் கூட்டுக்காகப் படிப்பையே தூக்கியெறிந்தான் சில்லாண்டி ஆனால், கோவிந்தன்? கோவிந்தன்?

சில்லாண்டிக்குள் தீக் கோலைச் சொருகின மாதிரியிருந்தது. “அடப்பாவி... காறித்துப்பிட்டியேடா. நம்பி வந்த ஜீவனோட நரம்பை அறுத்துட்டீயேடா.”

மனசின் கனல் வார்த்தையாகாமல்... முகமற்ற உணர்வுத் தகிப்பாக உள்ஜவ்வையே சுட்டுப் பொசுக்க_

ரெண்டு மாசத்துக்கு முந்தி, ஆடுகள், ஊருக்குள் நுழைகிற சமயம். ஆடுகளை இனம் பிரித்தனர். அவரவர் ஆடுகளைத் தனியாக்கிப் பத்திக்கொண்டு வந்தனர். கோவிந்தன் ஊருக்குள் போனான்.

சில்லாண்டி ஊரைத்தாண்டியிருக்கிற சேரிக்குப் போயாகணும்.

“போய்ட்டு வாரீயா-டா கோவிந்தா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/135&oldid=1810931" இலிருந்து மீள்விக்கப்பட்டது