உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காகிதம்

க்கருக்கு மண்ணள்ளிவிடப் போயிருந்தான், செபாஸ்டியன். பாடுபட்ட அலுப்பையெல்லாம் குளித்துக் கழுவிவிட்டு வருகிறான். பொழுதடைந்து விட்டது. இன்னும் இருட்டவில்லை. மயங்குகிற மேகத்து வெளிச்சம்.

செபாஸ்டியனுக்குக் கறுத்த திரேகம். ரோமம் அடர்த்தி. வைரம் பாய்ந்த புஜத்தைக் குளிரச் செய்து உலர்கிற நனைந்த ஈரத்துண்டு. ஈர வேட்டியை நாலாக மடித்து இடுப்பில் கட்டியிருந்தான். குடங்கையில் வெறும் தூக்குச் சட்டியின் கிலு கிலுப்பு அதற்குள் பீடி, தீப்பெட்டி, வாங்கின சம்பளம்.

ஆறுமணி பஸ் புழுதியைக் கிளப்பிக் கொண்டு திரும்பிப் போகிறது, ராசபாளையத்துக்கு. புழுதிப்படுதாவைக் காற்று இழுத்துச் செல்ல- வெளிப்படுகிற ராமலிங்கம். கபில நிற கதர்த்துண்டைத் தோளில் போர்த்தியிருந்தார்.

“ஏண்டா செபாட்டி, டக்கருக்குப் போனியா?”

“ஆமா சாமி”

“நாளைக்கு நமக்கு வாரீயா?”

“என்ன ஜோலிக்கு...சாமி?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/14&oldid=1807935" இலிருந்து மீள்விக்கப்பட்டது