உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி


அப்போது அவர்கள் மயானத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள். இறந்தவர்களைப் புதைக்கிற - எரிக்கிற இடம்.

இவர்களது ஏழு வருஷ நட்பைப் புதைக்கவா, எரிக்கவா?

சில்லாண்டியின் வெள்ளை மனசில் - கள்ளமற்ற பாலக மனசில் - பதிகிற சமூகத்தின் கூர் நகங்கள். குத்திக்கிழிக்கிற குரூர நகங்கள். மனித நீதிக்குப் பொருந்தாத கொடிய நகங்கள்.

‘தடுமாற்றமும் தயக்கமுமாய் தர்மசங்கடப்பட்டாலும், கோவிந்தனும் சாதி பார்த்துவிட்டானே... நட்பைவிடச் சாதி பெரிசு என்று நினைத்துவிட்டானே” என்ற உணர்வுதான்... நினைக்க நினைக்க அவனுள் ஒரு குண்டுபோல வெடித்தது.

இப்பவும் அப்படித்தான், ரெண்டுபேரும் ஆடுகளைப் பத்திக்கொண்டு கரிசல்தரிசில் விட்டனர். பக்கத்தில் எந்த வெள்ளாமையுமில்லை. ஆடுகளைத் தன்போக்கில் விட்டுப்புட்டு.. சற்று சுதந்திரமாக விட்டாற்றியாக இருக்கலாம்.

கோயிலுக்குள் நடந்த கோலாகலம். எப்போதும் வெறிச்சென்று கிடக்கிற கோயிலுக்குள் இன்றைக்கு நடந்த கோலாகலம். மனித நடமாட்டம். சந்தோஷக் கூவல்கள். ஆரவார இரைச்சல். சில்லாண்டித்தான் ஆர்வமும், குதூகலப் பரபரப்புமாய்க் கேட்டான்.

“ஆடுக மேயட்டும்... நாம வேணும்னா கோயிலுக்குள்ளே போவமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/140&oldid=1810940" இலிருந்து மீள்விக்கப்பட்டது