128
காகிதம்
“எதுக்கு?”
பொங்க வைப்பாக, மொட்டை எடுப்பாக.... கொலவை போடுவாக... நாமளும் பொங்கச் சோறு வாங்கித் திங்கலாம்”
“அப்ப.. நா மட்டும் போறேன். நீ ஆட்டைப் பாத்துக்க”
“ஏன்? நா வரக்கூடாதா?”
“நீ உள்ளே வரமுடியாது. நா வேணும்னா, ஒனக்கும் சேத்து பொங்கச்சோறு வாங்கிட்டு வாரேன்..”
“ஏன்- நா வந்தா என்ன? எனக்குச் சாமியில்லியா?”
“அது என்னமோ... எனக்குத் தெரியாது... இந்தக் கோயிலுக்குள்ளே நீ காலெடுத்து வைக்க முடியாது சொன்னாப் புரிஞ்சுக்க.”
அலட்சியமாகச் சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாய் ஓடிப்போய்விட்டான், கோவிந்தன். வெட்டுப்பட்ட வெள்ளாடாய்த் துடித்த இவன் முகத்தை -கண்களை மனசை - பார்க்கவேயில்லை, கோவிந்தன்.
எந்தவித மன உளைச்சலுமில்லாமல், ஆர்வமும் ஆசையுமாய்ப் பரபரத்த இவனை - இவனது உணர்ச்சிகளை- வெட்டிவிட்டுப் போய்விட்டான். அலட்சியமான புறக்கணிப்பு. அவமானகரமான நிராகரிப்பு.
காயம்பட்ட மனசில் உப்பையள்ளிப் போட்ட மாதிரி காந்தலெடுத்தது. வேப்பமரத்து நிழலில் வெக்கையாக நின்றான் சில்லாண்டி.
முதுகுக்குப் பின்னால் இருக்கும் கோயிலைப் பார்க்காமல். விசனப்பட்டுப்போய்.... கோபித்துக்