உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

காகிதம்


நாலு ஆள் நீட்டி நிமிர்ந்து படுக்கலாம். வாசல்ப்படி அத்தனை நீள அகலம். ஓடிய ஓட்டத்தில் அதில் ஏறி மிதிக்கப்போன-

“ஏலேய்!..”

வாசலில் ரட்சஸத் தாட்டியமாய் ஓர் ஆள். வெள்ளை வேட்டியும் மஞ்சள் துண்டும் போட்டு, மீசையும் வைத்திருந்தார். பார்த்தாலே மனசு பதறும். அப்படியொரு தோற்றம்.

திகைத்துப்போய் நின்ற சில்லாண்டி முகத்தில் வெலவெலப்பு. கண்ணில் அப்பிக் கிடந்த பீதி.

“எங்கேலே போற?”

கர்ண கடூரமான குரலில் இயல்பான அதிகாரத் தொனி.

ஓடிவந்த வேகத்தில் வேர்வைக்காடு. மூச்சிரைப்பு.

“கோயிலுக்குள்ளே.. கோவிந்தனைப் பார்க்க..”

“யாருலே...நீ?”

“சில்லாண்டி...ஆடு மேய்க்கேன்”

“சில்லாண்டியா? சேரிப் பயலா?”

“ம்”

“போடா அங்குட்டு” என்று கோபமாய் வெடித்துக் கத்துகிறார்.

பிடிபட்ட குருவிக்குஞ்சாக ‘விலுக், விலுக்’கென்று

விழித்தான் சில்லாண்டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/143&oldid=1810944" இலிருந்து மீள்விக்கப்பட்டது