மேலாண்மை பொன்னுச்சாமி
131
“ஆடு மேய்க்குற எளிய சாதிப் பயலுக்கு எம்புட்டுத் திமிரு இருந்தாஆ... கோயிலுக்குள்ளே வருவே? ராஸ்கல். போடா நாயே... வாசப்படியிலே காலை வச்சே... மண்டையை ஓடைச்சிப் போடுவேன்... படுவா... போடா... அங்குட்டு.”
கண் மூக்கு தெரியாத வெறியில் கத்துகிற அவர். அதட்டலும், மிரட்டலுமாய் காட்டுக்கத்தலாய் கூச்சலிடுகிற அவர்.
சில்லாண்டி அரண்டு போனான்.பயத்தில் டவுசரே நனைந்து போயிற்று. உயிரே அறுந்து போனமாதிரியிருந்தது.
அவனுக்குள் ‘என்னென்னவோ’ நிகழ... ஆட்டுக்கம்பை எறிந்துவிட்டு நடந்தான். கோயில் வாசப்படியை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அரை உயிராக நகர்ந்தான்.
மனசெல்லாம் கிடந்து கசந்தது.
அடுத்த வருஷம் ஜூன் மாதத்தில் ஏழாப்பில் சேர்ந்தான், சில்லாண்டி மட்டும்.
☐☐☐
கோயில் முன்னால்-
தர்மகர்த்தா உட்பட வெள்ளையும், சொள்ளையுமாய் பிரமுகர்கள் நின்றார்கள். அரசு ஊழியர்களும் நின்றனர். அவர்கள் பார்வைகள் முழுவதுமே ஊரிலிருந்துவரும் மெட்டல் ரோட்டின் மீது நங்கூரமிட்டிருந்தது. ஆவலான நங்கூரம். பரவசக் கூத்தாட்டமான நங்கூரம்.