132
காகிதம்
ஊரிலிருந்து கோயில்வரை ரோடு போட்டு ஏழெட்டு வருஷமாயிற்று.
ரோட்டில் பால்நிறக் கார் புழுதியைக் கிளப்பிக் கொண்டு பாய்ந்து வந்து நின்றது. ஊழியர்கள் பதற்றமும் பரபரப்புமாய்க் கதவைத் திறக்க ‘வாங்க சார்... வாங்க சார்..’ என்று பவ்யமாக வணங்கி வரவேற்க... பிரமுகர்கள் முகமெல்லாம் சிரிப்பாக வணங்கி வரவேற்றார்கள்.
காரிலிருந்து இறங்கிவந்த அறநிலையத்துறை அதிகாரி. கோயிலுக்குள் மரியாதையான உபசரிப்போடு மாலையணிவித்து வரவேற்கப்பட்ட அதிகாரி. கோயிலுக்குள் நுழைகிற நேரம் அதிகாரி ஷூவைக் கழற்றிக் கொண்டே வாசல்ப்பட்டியைப் பார்த்தார்.
அதே வாசல்ப்பட்டி... நாளு ஆள் படுக்கலாம். அத்தனை நீள அகலாம்.
அவரைச் சுற்றிலும் வரவேற்புச் சத்தம். ‘வாங்க, வாங்க’ என்று மரியாதையான உபசரிப்புகள்.
வெறும் உள்ளங்காலை வாசல்படியில் வைக்கிறபோது- குப்பென்று பழைய அக்னி ஜ்வாலைகள் சில்லாண்டி மனசில்.
☐☐☐