4
காகிதம்
வெறுத்துப் போய் விலகிப் போகிற ராமலிங்கம், ஆத்திரமூர்க்கமாய் சீறிப் பாய்கிற முணுமுணுப்பு.
“வர வர... காலடியிலே கிடந்த எளிய சாதிப் பயகளுக்கு மப்பேறிப் போச்சு. மட்டுமரியாதையில்லாம வாய் நீளுது. இழுத்து வைச்சு அறுத்தாத்தான்..கொழுப்பு அடங்கும்.”
அவரது முணுமுணுப்பில் முகம் காட்டிய குரூரவன்மம்.
போகிற வழியில் டீக்கடை முடிகிற நேரம். பால்ச் சட்டி ஒருச்சாயலாக உட்கார்ந்திருந்தது. டீ குடித்து விட்டால்... பசி சற்று அடங்கும். வீட்டிற்குப் போனால் சண்டை சத்தம் வராமலிருக்கும்.
“சாமி..டீ இருக்கா?”
“இருக்கு”
“ஒன்னு போடுங்க சாமி.”
சன்னாசித் தேவரும், முத்தைய நாடாரும், எல்லப்ப நாயக்கரும் எவர்சில்வர் கிளாஸில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இவன் கைக்கும் டீ வந்தது. பூப்போட்ட கண்ணாடிக் கிளாஸில் ததும்பிய டீயில் பாலாடை இணுக்குகளாக மிதந்தன.
பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு நடந்தான். ஊரைக் கடந்தால் பாலம். விலக்குப் பாதையில் நடந்தால் இவனது தெரு. மிஞ்சிப் போனால் முப்பது வீடுகள்.
கூரைவீடு. நாள்ப்பட்டுப் போன கூரை, கறுத்துப் போய் சாம்பலாய்க் கிடந்தது. கூரை முகடு கிழிந்து கிடந்தது. வீட்டிற்கு முன்பு அகலமான முற்றம். கூரை