மேலாண்மை பொன்னுச்சாமி
5
வல்லடைக்குக் கீழே கட்டியிருந்த கயிற்றுக் கொடியில் ஈரத் துண்டை காயப்போட்டான்.மொட மொடத்துக்கிடந்த கைலியை உருவி கட்டிக் கொண்டான்.
உள்ளிருந்து ஞானத்தாயின் சத்தம்.
“வந்தாச்சா?”
“ம்”
“சம்பளம் வாங்கியாச்சா?”
“ம்ம்”
“வௌக்கு மாடத்துலே ஒரு காயிதம் கெடக்கு.”
“எப்ப வந்துச்சு?”
“இப்பத்தான்.”
“எங்கயிருந்து?”
“திருச்சியிலேயிருந்து.”
செபாஸ்டியனுக்குள் ஊற்றெடுத்துப் பீச்சிய சந்தோஷம். குப்பென்று பூத்துச் சிரித்த பூவாசம். மனசுக்குக் கால்முளைத்துப் பரபரத்தது.
திருச்சியிலிருக்கிற அக்கா. அக்காவின் மகன் பாக்கியம். தீயணைப்புப் படையில் சேர்ந்து ஒரு வருஷமாகிறது. இங்கு வந்ததேயில்லை. நகரத்திலேயே பிறப்பு, படிப்பு, பணி எல்லாம். மகளை எப்படியாவது பாக்கியத்துக்கு கட்டிக் கொடுத்துவிட வேண்டுமென்று இவனது ரொம்ப நாள் ஆசை. ஜென்மக்கனவு.
‘காயித’த்தை எடுத்து விரித்தான். பழுப்புநிற இன்லெண்ட். “அன்புள்ள மாமா...” என்று துவங்கி, எல்லாருடைய நலனைச் சொல்லி, விசாரித்து– “வருகிற