உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி

19


பல்லி வாலாக அடி உதட்டில் ரணத்துடிப்பு. மனசுக்குள் எரிகிற தீயின் வெக்கை, முகத்திலும் அனல் வீசியது.

ராஜம் திகைத்துப் போனாள். எதுவும் தப்பாகக் கேட்டு விட்டோமா என்று தடுமாறினாள்.

“என்ன - விஜயம், நாராயணசாமி நாயக்கரு புஞ்சைக்கு வர்றதாகத்தானே இருந்தே?”

“ஆமா..”

“வரல்லியா?”

“வரல்லே...” வறண்ட குரலில் எரிந்து விழுந்தாள்.

“ஏன்... வரல்லே? வாரேன்னு சொல்லி, நம்பவைச் சுட்டு, கடைசி நேரத்துலே வரல்லேன்னு சொன்னா, எப்படி? வையமாட்டாரா நாயக்கரு?”

“வையட்டும்... நல்லா வையட்டும்! சின்னப்பய அல்பப்பயலெல்லாம் நாக்குலே நரம்புல்லாமே என்னைக் கேவலப்படுத்தறப்ப, பெரிய மனுசரு நாயக்கரு வையுறது பெரிய விஷயமா? வையட்டும். நாவரல்லே.”

விஜயத்தின் சீற்றம், சீறிச் சினந்து தெறித்த அனல் சொற்களுக்குள் புதைந்து கிடந்த மனவேதனை. ஒரு சோகம். குத்துண்ட புண்ணின் வலி.

ராஜத்துக்கு விஜயத்தைப் பார்க்கவே பாவமாக இருந்தது. இதற்கு மேல் கிண்டிக் கிளற விரும்பவில்லை. ‘நொந்த புண்ணை நோண்டக் கூடாது’ என்கிற கிராமத்து நாகரீகம்.

“சரி...அப்ப... நா போறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/32&oldid=1808873" இலிருந்து மீள்விக்கப்பட்டது