மேலாண்மை பொன்னுச்சாமி
25
“யாரு? அந்த புதுப் பணக்காரனா? வட்டிக்குக் கடன் குடுத்து வாங்குறதைப் பொழைப்பா வைச்சிருக்கானே.. அவனா?”
“அந்த எளவட்டந்தான்;”
“அதுக்கென்ன?”
“ஒறங்குதுக்குக் கண்ணை மூடுனா... நீதான் கனாவுலே வாரீயாம். அப்புறம் ஒறக்கமே வர்றதில்லியாம். ஒம் மேலே அப்படிச் சொக்கிப் போய்.. இருக்கானாம்.”
தீப்பந்தத்தால் முகத்தில் அறைந்த மாதிரியிருந்தது, விஜயத்துக்கு. வெலவெலத்துப் போனாள். 'இப்படி ஒரு மலப் பேச்சு முகத்துக்கு நேராக வந்து விழும்' என்று கனாக்கூட கண்டதேயில்லை அவள். அத்து மீறலான அசூயை. கற்பனை செய்ய முடியாத அருவருப்பு.
“அடி செருப்பாலே... நாயை” என்று பீறிட்டு வந்த உணர்வுப் பொறியான வார்த்தைகளைக் கூட சொல்ல வாயில்லாமல் ஸ்தம்பித்துப் போய்விட்ட விஜயம். மனம் முழுக்க தகிப்பு. திரேகமே பற்றி எரிகிற மாதிரியான தோர் தகிப்பு.
வந்த கடமை முடிந்ததென்று போய்விட்ட வேலக்கா.
விஜயத்தால் நிற்கக்கூட முடியவில்லை. திரேகமே நடுங்குவதைப் போலிருந்தது.
‘நா வேணும்னா லட்சணமாப் பொறந்தேன்? லட்சணமா இருந்து தொலைச்சுட்டா. அதுக்கு நா என்ன செய்ய? இந்தப் பாவியோட கொள்ளிக் கண்ணுலே படணும்னா... வேப்பமரம் வழியாப் போறேன்? இந்தச் சின்னப்பய சில்லறையைப் பாத்து சிரிச்சு மயக்கவா, அவன் முன்னாலே போறேன்? அந்தச் சின்ன நாயி சில்லறை...