உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

காகிதம்


எரியும் மனசுக்குள்ளிருந்து ஜ்வாலைவிடும் நினைவுகள். நினைவுகளின் வெக்கை.

நின்று நிதானித்த கிடாய்க்குட்டியின் சலனமின்மையில், நின்றுபோன கழுத்து மணியோசை. அதிலேயே இவரது வருகையை நுகர்ந்துவிட்ட கெழடி... கழுத்தை வாசல் பக்கமாய் நீட்டினாள். “வந்துட்டீகளா?”

“ம்...”

“சாப்ட்டுக்கிடுதீகளா?”

“போடு. ஏதாச்சும் போட்டு அடைச்சுக்கிடணும்லே?”

கிழடி இவரை விடவும் நொடித்துப் போயிருந்தாள். தோலைப் போர்த்திய எலும்புக்கூடாகிப் போய்... அதன் குழல் வாய்க்குள் ஊசலாடுகிற உயிர்க்காற்றாகி..

சாப்பிட்டு முடித்தார். நரைத்த மீசையை ஒதுக்கி விட்டு நீவி விட்டுக் கொண்டார்.

பீடியைப் பற்றவைக்கப் போனவரை... கிழடி கடிந்தாள்.

“ஏய் கெழட்டுச் சனியனே... அதுக்குள்ளே எதுக்கு இந்த நாத்தத்தை வாய்லே சொருகுதீக?”

“பீடி குடிச்சா...ஒனக்கென்ன வந்துச்சு?”

“வவுத்த வலிக்கு மாத்திரையும் டானிக்கும் குடிச்ச பிறகு பத்தவைக்க வேண்டியதுதானே?”

“அது வேற... இச்சிலாத்தி. ச்சே!”

அவரது முகச் சுருக்கங்களில் ததும்பி நின்றன சலிப்பும், எரிச்சலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/45&oldid=1809316" இலிருந்து மீள்விக்கப்பட்டது