உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

காகிதம்


“ஆமா மாப்ளே.. எங்கேயோ கெளம்புன மாதிரித் தெரியுது. தூரவா?”

“ஆமா மாமா ஒரு முக்கியமான கல்யாணம். போகலேனா சண்டைக்கு வருவான். நேத்தே போயிருக்கணும். போகலே. இப்பவாச்சும் போயாகணும்.”

“நானும் முக்கியமான காரியமாத்தான் வந்துருக்கேன். நீங்க அடுத்த வண்டிக்குப் போங்க, மாப்ளே.”

முக்கியம், நிஜமாகவே முக்கியம்தான். ஒரு நெருக்கமான உறவுப் பெண்ணின் குடும்ப வழக்கு பற்றிய விஷயம்.வாழ்க்கையா - விவாகரத்தா என்று நிர்ணயிக்கிற அளவுக்கு முக்கிய விவகாரம். அந்த முக்கிய விவகாரம் முடிய... அன்றைய பொழுது சரியாயிற்று. ரெண்டாம் நாளும் போச்சு, நாளை கல்யாணம்.

இப்பவாச்சும் போயாகணும். போகலேன்னா... முத்துசாமி காறித்துப்புவான். ‘நீயெல்லாம் ஒரு மனுஷந்தானா?னு’ நாக்கைப் புடுங்கிக்கிடுற மாதிரி ‘நறுக்கு’னு வேள்வி கேப்பான். கேட்டா வாங்கிக் கட்டிக்கிட வேண்டியதுதான்.

முத்துசாமி நல்ல மனசுக்காரன். இவனுக்கும் ராஜத்துக்கும் வேட்டி, சட்டை, சேலை எல்லாம் புதுசாக எடுத்துத்தர எண்ணியிருந்திருக்கிறான். கல்யாணச் செலவு கையைக் கடிக்க, அந்த எண்ணத்தை வருத்தத்தோடு கை விட்டிருக்கிறான். அதை அவனே அன்றைக்குச் சொல்லிச் சொல்லி மருகின விதம்... இயலாமை குறித்துப் புலம்பிய விதம்..

ராஜம்தான் ஆறுதல் சொன்னாள். “விடுங்கண்ணாச்சி... இதுக்குப்போய் வருத்தப்பட்டுக்கிட்டு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/59&oldid=1809353" இலிருந்து மீள்விக்கப்பட்டது