உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாண்மை பொன்னுச்சாமி

47


நாளும் பொழுதும் கெடக்கு. நாம எப்ப வேணும்னாலும் நல்லது பொல்லது கொண்டாடிக்கலாம்.”

அப்பேற்பட்டவன் வீட்டுக் கல்யாணத்துக்கு-நாலு பேரைப்போல நாலாம் மனிதரைப்போல... நாமும் கல்யாணத்தன்னிக்குப்போய் நிக்கிறதா? நின்னா... அது நியாயமா? ச்சே!

“அப்ப...நா போயிட்டு வரட்டா..?”

“போயிட்டு வாங்க.”

“பசுவைப் பாத்துக்க.”

“ஆட்டும்.”

வீட்டு முற்றத்தில் காலெடுத்து வைத்தான் விநாயகம். ஒருத்தன் ஓட்டமாக ஓடி வந்தான். உயிர்தெறித்துப்போக, வெறி வேகமாக ஓடி வந்த அவன் முகத்தில் தாங்க முடியாத வெலவெலப்பும் திகிலும்...

விநாயகமும் வெலவெலத்துப்போய்..

“என்னப்பா?”

“உங்க கீழக்காடு பருத்திப் புஞ்சை இருக்கு இல்லே?”

“ஆமா...”

“ஒன்றைக் குறுக்கம் புஞ்சையும் ஒரு செடி விடாம் ஆடுக மேய்ஞ்சிருச்சு. வெள்ளாமை பூராவும் சர்வநாசம், பானைஞ்சாயிரமும் படு நாசம்.”

விநாயகத்துக்குள் ‘திக்’கென்றது. நெஞ்சுக்குள் அடைப்பது போல ஒரு திணறல், ‘இன்னது நடந்தது’ என்று நிதானிக்க முடியாத மனப்பதட்டம். குருட்டுத் திகைப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/60&oldid=1809356" இலிருந்து மீள்விக்கப்பட்டது