உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

காகிதம்


வற்றலைத் துட்டாக்கிவிடலாம். அடகு கிடக்கும் பொண்டாட்டி நகையைத் திருப்பிவிடலாம்.

அவனுக்குள் ஒளிச்சிமிட்டல்கள். மகிழ்ச்சி மின்னல்கள். ஆசை ஆசையாக அந்தப் பத்தியையே திரும்பத் திரும்பப் படித்தான்.

அவனுக்குள் குதூகல ஊற்று. மரத்துக் கிடந்த நரம்புகளெல்லாம் சட்டென்று ரத்தம் பாய்ந்த மாதிரி அவனுள் ஓர் உற்சாகப் பெருக்கு. ஒரு மகிழ்ச்சியான வெள்ளச் சூழல்

தெருவில் நடந்தான். நடையில் ஒரு துள்ளல். வீசுகிற கைகள், சற்று தாராளமாய் நீள்கின்றன. கைவீசி நடந்தான். மேல் துண்டைப் பிடித்து இழுக்கும் காற்றை ஒரு சந்தோஷ வசவு வைது கொண்டான். துண்டை தலையில் வட்டக்கட்டாகக் கட்டிக் கொண்டான்.

அவன் மனசுக்குள் ஒரு துடிப்பு. அறுந்து கொண்ட கன்றுக் குட்டியின் கும்மாளம். மயிலிறகின் உரசலால் வருகிற மகிழ்ச்சியான - புல்லரிப்பான கூச்சம் மனம் முழுக்க ததும்பியது.

வீடு வந்து சேர்ந்தான்.பொழுது அடைந்துவிட்டது. இன்னும் இருட்டவில்லை. மேகத்து வெளிச்சம் மிச்சமாக இருந்தது.

வீட்டுத் திண்ணையில் -

வேறு யாரோ.. ஓர் ஆள்.

யார் இது?-

யோசனையோடு நெருங்கிப் பார்த்தால்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/69&oldid=1809953" இலிருந்து மீள்விக்கப்பட்டது