உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

காகிதம்


நாள் ரோமக்கட்டை கன்னத்தில், ஒரு வறண்ட பெருமூச்சோடு அதைத் தடவினார். ஐம்பது வயசு, பாதி ரோமங்களை நரைக்க வைத்திருந்தது.

மடத்துத் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். அவருக்கே அந்நியமாக உறுத்தியது. மடத்தில் அவர் உட்கார்ந்ததேயில்லை. இதுநாள் வரை. மடத்தில் துண்டு விரித்துப் படுத்திருக்கும் ‘சோம்பேறி’களை- ‘கிழி, கிழி’ என்று அப்படிக் கிழிப்பார்.

“துப்புக்கெட்ட நாய்க... ஒடம்பை வளைக்காம, சுருண்டு கெடக்குற எச்சிலை நாய்க.”

உழைப்பு என்பது சன்னாசிக்கு சுவாசம். அதைச் செய்யாமல் ஒரு கணம்கூட இருக்க மாட்டார். காட்டில் இருந்தாலும் சரி... வீட்டில் இருந்தாலும் சரி... கை எதையாச்சும் நோண்டிக் கொண்டேயிருக்கும். சும்மாவே இருக்காது.

எல்லாச் சம்சாரிகளும் அப்படித்தான் என்றாலும்- சன்னாசி சற்றுக் கூடுதல். அவருக்குப் பிடித்த வாசமே வியர்வை வீச்சம்தான். குளித்து முழுகி அலைகிற மைனர்களை, ஒரு நாயைப் பார்க்கிற மாதிரி அருவருப்பாகப் பார்ப்பார்.

தண்ணீர் பாய்ச்சல், களைவெட்டு, உழவு, பாத்தி கட்டு, நடுவை எல்லா வேலைகளுமே அவர்தான். அவரது வியர்வைப் பிசுபிசுப்பு படாமல், அவர் தோட்டத்தில் ஓர் அங்குலம்கூட இருக்காது. இது போக...

வாரா வாரம் வியாழக்கிழமை சந்தைக்கு ராசபாளையம் வண்டி போடுவார். வண்டியில் ரெண்டு நீள தேக்கு வாரி கட்டியிருப்பார். பருத்தி மருகைகளோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/75&oldid=1810252" இலிருந்து மீள்விக்கப்பட்டது