உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

காகிதம்


திங்கட்கிழமையாயிற்று. சன்னாசிக்குள் வந்து போகிற புஞ்செய், உழ முடியாமல் கிடக்கிறது. குப்பை அடிக்க வேண்டும். கிடைபோட வேண்டும்.

“பாடுசோலிக மலைபோல குமிஞ்சிக்கிடக்கு. ஓடியாடிப் பாடுபட வேண்டிய நாள்லே, கொக்கு நோய் கண்ட கோழியா மொடங்கிக் கெடந்தா.. எப்படி? என்ன வேலை நடக்கும்? எப்படி வெள்ளாமை செய்றது?”

காய்ச்சல் வெறியில் சத்தமாகவே முணுமுணுத்துக் .கொண்டார். மடத்துத் திண்ணையிலிருந்த ஒன்றிரண்டு பேரும் இவர் தலையைக் கண்டதும் பதறிப் போய் ஓடிவிட்டனர். இவர் தான் ‘மடத்துவாசிகள்’ என்றால்- நாற வசவாக வைவாரே...

பெரிய மடம். விரிந்து நீண்ட திண்ணை. ஒற்றையாளாக இவர் மட்டும். தனிமையும் தேவைதான். சுள்ளென்று சுடுகிற வெறுமை, நெஞ்சைத் தாக்கினாலும். பேசத் சீவனில்லாத நேரம். தனிமைதான் தோது. யாரும் வாய் கொடுத்து, ‘நைய்.... நைய்’ என்று நச்சரித்தால்.. இச்சிலாத்தியாக இருக்கும். உயிர் வாதை.

இப்படி ஒற்றையில் இருப்பதுவும் நல்லதுதான். கை விரலை மடக்கி எண்ணினார். ‘வெள்ளி ஒண்ணு, சனி ரெண்டு, ஞாயிறு மூணு, திங்கள் நாலு... ‘அடேயப்பா- நாலு நாளா காய்ச்ச அமுக்கிருச்சா...? நாலு நாளா புஞ்சையை மிதிக்காம இருக்கோமோ.. இப்படியிருந்தா புஞ்சைதான் வெளையுமா? வீடுதான் விளங்குமா?’

சன்னாசிக்குள் கிடக்கிற சம்சாரி மனசின் தவிப்பு. தகிக்கிற காய்ச்சல். கண்பட்டையெல்லாம் கோழி கொத்திப் பிடுங்குகிற புண்ணாக, ரணம். மொத்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/77&oldid=1810256" இலிருந்து மீள்விக்கப்பட்டது