உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதம் 2010.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

காகிதம்


ஒன்றும் புரியவில்லை, உறக்கச்சடவில். கண்ணைக் கசக்கிவிட்டு-வாயிலிருந்த எச்சிலைத் துப்பிவிட்டு உற்றுப் பார்த்தார்.

பாதைக்குத் தெற்கே -

வெறும் சிதைத்தீ. ‘சட்... சட்...சடார்’ ரென்கிற தெறிப்புச் சத்தங்களோடு வெறுமனே எரிகிற தீ. கனன்று எரிகிற தீ. ‘ஆமா... இது... நத்தம்பட்டிச் சுடுகாடுதான்’ என்று நினைத்துக்கொள்கிறார்.

கழுத்தைத் தூக்கி... எம்பி... மாட்டுக்கு முன்னால் பார்க்கிறார்.கன்னங்கரேலென்று ஓர் உருவம், பாதையின் நடுவில் -மாடுகளை மறித்துக் கொண்டு அந்தக் கரிக் கட்டையான தோற்றம்.

பார்த்த கணத்தில் -

இவரது நெஞ்சுக்குள் ஊசியைச் சொருகின மாதிரி சுருக்கிட்ட வலி. முதுகின் பாதிவரை பாய்ந்து பரவிய வலி.

குப்பென்று உடம்பெங்கும் வியர்வை. வியர்வைக் காடு. பயத்தில் நாக்கு ஒட்டிக் கொண்டது. ‘தொப், தொப்’ பென்று நனைந்து போன வியர்வைத் திரேகம்.

“ஏய்... ஏய்க்...ஏய்க்” என்று தொண்டை, மூளிச் சத்தமாய் உடைந்து கதறுகிறது. உயிரே 'போய் வந்த மாதிரியிருந்தது, ஒரு கணத்தில்.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட அறிவு; சாமம், ஏமம் என்று பாராமல் காடு கரைகளில் அலைந்து திரிந்த சம்சாரி அறிவு; அதற்கேயுரிய முரட்டுத் துணிச்சல்.

“அட.... இதுதானா?” என்று சுய பரிகாசமாய் வியந்து கொண்டார். “பேயா..பிசாசா? பிரேதம் தானே..?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகிதம்_2010.pdf/81&oldid=1810268" இலிருந்து மீள்விக்கப்பட்டது