மேலாண்மை பொன்னுச்சாமி
71
மற்றவர்களிடமும் இதைப் பற்றிப் பேசிக் கொள்ளவுமில்லை.
மடத்தில் கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்த நிலையில் உட்கார்ந்திருந்த சன்னாசிக்கு, இடுப்பு தாங்கவில்லை. ரொம்பக் கடுத்தது. காய்ச்சல் ரொம்பக் கூடிவிட்டது. குளிர் தாங்க முடியாமல் ‘வெட, வெட்’ வென்று நடுங்கினார். உதடுகள் வெடவெடத்தன. மேல் பல்லும் கீழ்ப் பல்லும் மோதிக் கொள்கிற சத்தம்.
அந்தக் காய்ச்சலின் உக்ரத்தில்... கண்மூடிய நிலையில்- பிரக்ஞை தவறிய கணத்தில்.. காய்ந்துலர்ந்த உதடுகள் முணுமுணுத்தன.
“பேயா- பிசாசா? பிரேதம்தானே?”
மடத்து சிமெண்டுத் திண்ணையில் மயங்கிக் கிடந்தவரை நாலைந்து பேர் கூடித் தூக்கிச் சென்றனர், வீட்டுக்கு.
அன்றைக்கு ராத்திரி பூராவும் -
கண்ணைத் திறக்காமல் கிடந்தார், சன்னாசி. எதை எதையோ புலம்பினார். போனது - வந்தது - நடந்தது- நினைத்தது என்று சகலத்தையும் குழம்பிக் குழம்பிப் புலம்பினார், காய்ச்சல் வெறியில்.
அந்தப் புலம்பலுக்கு நடுவில் -
சம்பந்தமற்ற தனித் தொனியில் -
“பேயா... பிசாசா? பிரேதம்தானே?” என்றும் தைர்யம் சொல்லிக் கொண்டார்.
அவரைச் சுற்றிலும் உறவுகளின் ஒப்பாரி சத்தம்.
மறுநாள்–