மேலாண்மை பொன்னுச்சாமி
81
போலீஸ் வந்துதான் வசூல் பண்ணும்” கடுமையான மிரட்டல் ஒன்றை கடைசிக் குண்டாகத் தூக்கிப் போட்டு விட்டு நடந்தார். அவரது மடிப்புக் கலையாத பேண்ட்டும், கட்டம் போட்ட ஸர்ட்டும், வலது கை ரிஸ்ட் வாட்சும்... பார்க்கப் பார்க்க முச்சாமிக்கு வெறுப்பாக இருந்தது.
ஹும்... உழைச்சுக் குடுத்த எங்களுக்கு அழுக்கு வேட்டி, உங்களுக்கு கோட்டு, சூட்டு... காலம் இப்படியேவா போயிடும்?
இனம் புரியாத குருட்டுக் கோபத்தில் சிந்தனை தடம் மாறித் தாறுமாறாக ஓடியது.
அரிவாள் கம்பு ஒரு கையிலும், மீசையில் ஒரு கையுமாக எதிரில் ஒரு கொடிய உருவம் நெருங்கி வருவதைப் போன்ற பிரமை! மனசைப் பிடித்து குலுக்குகிற பயம்.
“அட, அரசாங்கம் அம்புட்டு மோசமாகவா போயிடும்” அப்படியொரு நம்பிக்கை பயத்தைச் சற்றுத் தணியச் செய்தாலும் ஒரு அயற்சி கவ்வியது.
‘சம்சாரிகளைப் பிடிச்ச இந்தக் கடன்சள்ளை எப்பத்தான் தொலையப் போவுதோ... சாவோட சேர்ந்து தொலையுமா, அதுக்குப் பிறகு பிள்ளைகளை நசுக்குமோ- ஹும்-எம்புட்டுக் கடன்!’
கிணறு வெட்ட வாங்கிய எல்.எம். பேங்க் கடன் ஞாபகத்திற்கு வந்தது. சுருக்குப் பைக்குள் சுருண்டு, பாண்டியன் பேங்க் லாக்கருக்குள் கிடக்கிற மனைவியின் நகைகள் மனசில் தோன்றின.
கமிஷன் கடையில் வாங்கிய கடன் - பலசரக்குக் கடை லோன்... போதாக் குறைக்குக் கைமாத்தும்