பக்கம்:காகித உறவு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குடிக்காத போதை

ருக்குச் சற்றுத் தொலைவில், ஹிப்பி மாதிரி ஒதுங்கிய இடம். சுற்றிலும் கருவேல மரங்கள் இரும்புக் கம்பிகள் மாதிரியும் அவற்றிற்கு இடையே இருந்த வேலிக்காத்தான் செடிகள், முட்கம்பி வலைகள் மாதிரியும் இருந்த இடம். மொத்தத்தில் அது ஒரு மாதிரி இடமல்ல. ஒரு மாதிரியான இடம். இந்த இடத்தைச் சுற்றிக் கரைவரை மணல் புரளும் ஒடை 'அகழி' மாதிரி மூன்று பக்கமும் சுற்றி இருந்தது. கிட்டத்தட்ட காடு, தலைகீழ் பரிணாமத்தால் தோப்பானது போலவும், தோப்பு காடாகப் பரிணாமமாகிக் கொண்டிருப்பது போன்றும் தோன்றும் பகுதி.

இந்தப் பகுதியில் ஒர் ஒரத்தில், பாழடைந்த கட்டிடம். அந்தச் செங்கல் கட்டிடத்தில், இன்னும் இடியாமலே விழுந்து கொண்டிருந்த ஒரு சுவருக்குப் பக்கத்தில், இரும்பு அடுப்பிற்கு மேலே, பத்து 'பிளாடர்' அளவுக்கு அதாவது ஐம்பது லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம். டிரம்மிற்கு மேலே பதினைந்து லிட்டர் சரக்கைப் பிடிக்கும் தவலைப் பாத்திரம், அதற்கு மேலே 'டேங்கா' - அதாவது ஒரு சின்னப்பாத்திரம். இந்த மூன்று உபகரணங்களும் காற்றுப் புகாதபடி, எதையோ வைத்துக் கட்டப்பட்டிருந்தன. உச்சியில் இருந்த பாத்திரம், அலுமினியத் தகட்டால் மூடப்பட்டு, பிரிக்க முடியாத பிராண சிநேகிதர்கள் போல் இறுக்கப்பட்டிருந்தது.

மேலே இருந்த 'டேங்கா'வில் முழுக்க முழுக்கத் தண்ணீர் இருக்கிறதாம். அதற்குக் கீழே இருந்த டிரம்மில் ஊறப்போட்ட வெல்லமும், பட்டைகளும் கொட்டைகளும் கொஞ்சம் சல்போட்டா வகைகளும் இன்னும் பல கிக் வகையறாக்களும் இருக்கின்றனவாம். இரும்படுப்பில் எரியும் செந்தீ அனலைக் கக்கியதால், டிரம்மிற்குள் இருப்பவை பொங்கி எழுந்து, 'ஆவியாகி' 'டேங்காவில்' பட்டுக் குளிர்ச்சியாகி, ஜீவாத்மாவான அந்த ஆவி, 'பரமாத்மாவாகி, நடுவில் இருந்த தவலைப் பாத்திரத்திற்குள், சொட்டோ சொட்டென்று சொட்டிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், ஜில்லா கலெக்டரை விட பலமடங்கு சர்வவல்லமையுள்ள, மாவட்டக் காய்ச்சும் அதிகாரியிடம் தாலுக்கா சப்ளை அதிகாரியாக இருந்தவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/14&oldid=1384247" இலிருந்து மீள்விக்கப்பட்டது