பக்கம்:காகித உறவு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

25


அவரிடம் வேலைக்குச் சேர்ந்தான். இரண்டு மாத காலம் ஆகியிருக்கும்.

முதலாளி வீட்டின் வெளித்தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில், சகாக்களுடன் கண்னன் அமர்ந்திருந்தபோது, செல்லமாகவும் சிணுங்கும்படியாகவும் வளர்க்கப்பட்ட மச்சகாந்தி அந்தப் பக்கமாக வந்தாள். உடனே, கண்னன் தவிர எல்லோரும் எழுந்து நின்றார்கள். கண்ணன் மட்டும் அசையாமலும் அவளைப் பாராமலும் உட்கார்ந்திருந்தபோது, அவன் சகாக்களில் ஒருவன், “டேய் சோமாறி! காலு ஒடிஞ்சா பூட்டு...? எழுந்திருடா...” என்று புதியவனான அவனை மிரட்டுவதுபோல் கேட்டான்.

“ஏண்டா... இப்படி குட்டுறதுக்கு முன்னாடியே தலையக் குனியுறீங்க... உங்கள மாதிரி உருப்படி இல்லாத பசங்களால் தான் நம்ம சமூகமே உருப்படி இல்லாம துண்டு துக்கடாவா போயிட்டு. நாமும் மனுஷங்கதாண்டா...” என்றான் கண்ணன். மச்சகாந்தி, கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கோவிச்சுக்காதே பாப்பா. இவன் இப்படித்தான். இம்மாந் தொலவு பேசுறானில்லே, இவன்தான் நீ பஜாருக்கு போகச்சே எவனோ ஒரு சோமாறி கிண்டல் பண்ணுனப்போ.. அவன் வாயில குத்தினான்” என்று சமாதானம் சொன்னான் ஒருவன். மச்சகாந்தி கண்ணனை நேருக்கு நேராகப் பார்த்தாள். ஆணவம் இல்லாத சுயமரியாதைத் தோரணை, கபடமில்லாத கண்கள். கட்டுமஸ்தான உடல். மச்சகாந்தி திருப்தியோடு சிரித்துக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.

அப்புறம் இன்னொரு நாள் ‘லாஞ்சுக்கு’ டிஸல் பிடிப்பதற்காக முதலாளியிடம் பணம் வாங்க வந்த கண்ணன், அவர் இருக்கிறார் என்ற அனுமானத்தில் தாழ்வாரத்தைத் தாண்டி உள்ளறைக்கு வந்துவிட்டான். தனியாக இருந்த அவள் சிரிப்பை முந்தானையால் அணைகட்டிக் கொண்டே வெளியே ஒடிப்போய், ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டுவந்து, அவன் பக்கத்தில் போட்டுவிட்டுச் சமையலறைக்குள் ஒடினாள்.

‘கிண்டலைப் பாரேன். தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு கண்ணன் கோபமாக நின்றான். மச்சகாந்தி, சூடான காபி டம்ளரைக் கையிலும், சுவையான ரசனைச் சிரிப்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/27&oldid=1383305" இலிருந்து மீள்விக்கப்பட்டது