பக்கம்:காகித உறவு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சமூக புயலில் ஒரு காதல் கூடு


ச்சகாந்தி இருப்புக் கொள்ளாமல் தவித்தாள். கடல் பக்கம்போன கண்ணன், மீண்டும் தன்னைப் பார்க்கத் திரும்பி வருவான் என்று நினைத்தும், வருகிறானா என்ற ஆவலுடன் நாற்காலியின் மேல் சட்டத்தில் கையூன்றி, கண்களைத் தொலை நோக்கி போல் வைத்துக் கொண்டிருந்தாள். அவன் வரவில்லை, கணவனும் தந்தையும் கூத்தில் ஆழ்ந்திருக்க மெல்ல நழுவினாள் மச்சகாந்தி.

மையிருட்டு மொய்த்த கடலோரத்தில் கட்டுமரம் ஒன்றில் ஒர் உருவம் இருப்பதை பார்த்துவிட்டு, அவள் ஒடினாள். இளைக்க இளைக்க ஒடினாள், அவள் அனுமானம் பொய்க்கவில்லை.

கண்ணன், அவளைப் பாராமலே "வா... காந்தி..." என்றான். மச்சகாந்தியால், அந்தக் காலைப் பார்த்ததும் தாள முடியவில்லை. அதைக் கட்டிக் கொண்டு, "ஒனக்கா இந்தக்கதி. ஒனக்கா இந்தக் கதி..." என்று கடலலை ஒலி குறையும்படி புலம்பினாள். "நான் சொன்னதைக் கேட்டிருந்தால் ஒனக்குக் காலு போயிருக்குமா? தொட்டுப் பேசின பெண்ண ஏறிட்டுப் பார்க்காமலே போயிட்டே. கடைசில. நயினா சொன்னது மாதிரி கன்னி காவலம்மன். சுறாமீனா வந்து ஒன் காலை எடுத்துட்டாள். நான்தான் பாவி... என்னாலதான். இப்படி ஆயிட்டே!”

கண்னன், நிதானமாகப் பேசினான் :

“கன்னி காவலம்மன். காலை வாங்கல. ஒன் அப்பன் தான் வாங்குனான்.”

“என்ன சொல்ற...”

“நடந்ததச் சொல்றேன் நீ யாருகிட்டேயும் சொல்ல மாட்டேங்கற நம்பிக்கையில் சொல்றேன். கட்டுமர மீனவர்கள் ஒண்ணாச் சேர்த்து போலீஸ் ரிப்போர்ட் கொடுத்து ஜனங்கள, ஒண்ணு திரட்டுன என்மேல் ஒப்பனுக்குத் தீராத கோபம். நானும் ஒன்னை எப்படியாவது கூட்டிக்கிட்டு வாரத்துக்காக ஒரு திட்டம் போட்டிருந்தேன். என்னோட ஆள் ஒருவனை ஒன் நயினா லாஞ்சுக்கு அனுப்புனேன். இதைத் தெரிஞ்சுக்கிட்ட ஒன் நயினா நான் கடலுல கட்டு மரத்துல இருந்து வலைய விட்டுகிட்டு இருந்தப்போ, ‘லாஞ்சு’ கொண்டு வந்து மோதுனாரு. ஆஸ்பத்திரிலதான் கண்விழிச்சேன். ஒரு காலைக் காணல.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/30&oldid=1383312" இலிருந்து மீள்விக்கப்பட்டது