பக்கம்:காகித உறவு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

31


குறவர்களோ, குடியும், குடித்தனமுமாக விதிக்கப்பட்ட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கிழவன், தேக்குக் கம்பு ஒன்றில் அரத்தினால் பலவித கோடுகளை அறுகோணம் போலவும், முக்கோணம் போலவும், தீட்டிக் கொண்டிருந்தார். இருந்தவர்களிலேயே எடுப்பாகத் தெரிந்த செங்கோடன் கூண்டைத் திறந்து, குரங்குகளுக்கு, பொறி கடலை, நெல்லுப்பொறி போட்டுக் கொண்டிருந்தான். பொறி வைத்து பிடித்துவிட்டு, பொறிகடலையோடும் அவனை, சில குரங்குகள் குரைத்தபோது, டப்பாவையே சாப்பிடப் போகிறவள்டோல், இன்னும் உண்ட வேலையை மட்டும் கருதியவளாய், அந்த உணவுக்கு வழி செய்யும் வேலையை செய்ய மறந்தவளாய் இருந்த டப்பாக்காரியை அதட்டினான் செங்கோடன்.

“ஹே.ஹே..முட்டக் கண்ணு. முட்டக்கண்ணு. எத்தனோ தரம் சாப்புட்றது. ஏய்ந்திரு கழுதெ... கழுதெ... கொரங்கோ... அடைப்பியா. தின்னுப்புட்டே... வயிறுபுடக்க... கெடப்பியா...”

‘முட்டக்கண்ணு’ என்ற இடுகுறிக்கு ஆளான டப்பாச் சோற்றுக்காரியான ஷோக்காட்டாளுக்கு ஆத்திரம் பீறிட்டது.

‘மன்ஷல்லே. பலா அந்தஸ்துண்டு... நீ. ஏதோ ஒரு அந்தஸ்த காட்டுறியா... காட்றா. பாக்கோலாம். காட்டுறியா. காட்றா பாக்கோலாம்...”

செங்கோடன், ‘மன்ஷ’ அந்தஸ்துக்களாகக் கருதப்படும் வில்லில் ஒரே கல்லால், கெளதாரியை அடித்தல், தன்னந் தனியாக குரங்கைப் பிடித்தல், நரிபோல ஊளையிடுதல், ஐந்தரை கிளாஸ் சரக்கை அனாவசியமாகக் குடித்தல், மாரி மீனாட்சி (மதுரை மீனாட்சி) மேல் பாட்டுப் பாடல், எருமைக் கிடாவின் கழுத்துப் பக்கத்தில் தோலை உரித்து, புடைத்து நிற்கும் இரண்டு நரம்புகளை வில்லால் அடித்து, ரத்தத்தை நீருற்றுப்போல் வரவழைத்தல் போன்றவற்றில் எந்த அந்தஸ்தைக் காட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, டப்பாக்காரியான முட்டைக்கண்ணு மீண்டும் ‘காத்தறா... பாக்கோலாம். காத்தறா பாக்கோலாம்’ என்றாள்.

செங்கோடன் மிரளும்படி, டப்பாக்காரி மிரட்டுவது அவன் மனைவி வெள்ளைக் கோட்டுக்காரிக்கு கோபத்தைக் கொடுத்தது. ‘மன்ஷ’‘’ அந்தஸ்தைக் காட்ட முடியாமல் போன கணவனுக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/33&oldid=1383322" இலிருந்து மீள்விக்கப்பட்டது