பக்கம்:காகித உறவு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

லாரி சிங்கி


வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவள், அவனால் காட்ட முடியாது என்பதைக் காட்டிக் கொடுத்த களிப்பில் கைதட்டிச் சிரித்த முட்டக்கண்ணான டப்பாக்காரி மேல் கோபம் வந்தது அவளுக்கு. இவள் சவாலிட்டாள்.

“ஹே. ஹே.. ஷோக்காரி. முட்டக்கண்ணோய்... பொம்புள மேலே பலா அந்தஸ்துண்டு. நீ ஒண்ணே ஒண்ணு காட்டே... பாக்கலாம்... காட்டே பாக்கலாம்.”

முட்டக்கண்ணுவின் புருஷன் சும்மா இருப்பானா? வரையாடு மாதிரி எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு, மனைவிக்கு ஒத்தாசை செய்ய வேண்டும் போலிருந்தது. வெள்ளைக் கோட்டுக்காரி, அவனுக்குக் கூடப் பிறந்த தங்கை, ஆகையால் உரிமையோடு கையை ஓங்கிக் கொண்டே ‘’ஹே... ஹோ... லாரிச் சிங்கி. அண்ணோனும் தங்கோயும் தொமாஷ் பண்னோனா ஒன்மேல எது வந்தோதுது என்று அதட்டினான். இந்த அதட்டலைப் பார்த்ததும் செங்கோடனுக்கு கோபம் வந்தது. பின்னர் அண்ணன்காரன் தங்கைக்காரியை அடிக்கப் போவதுபோல் பாச்சா காட்டுவதில் தப்பில்லை என்று உணர்ந்தவன் போல், திக்குமுக்காடிக் கொண்டிருந்போது, கோவணம் மட்டுமே கட்டியிருந்த இன்னொரு இளங்குறவன், கையிலிருந்த டப்பாவை அடித்துக்கொண்டே தக்கா புக்கா. புக்கா தக்கா. தக்கா. தக்கா. புக்கா. புக்கா...' என்கிற மாதிரி ஒரு பாட்டைப் பாடிக்கொண்டு டப்பாங்குத்து ஆடியதைப் பார்த்து, எல்லோரும் சிரித்தார்கள்.

அப்போது கம்பீரமான தோற்றத்துடன் ஒருவரும், அவருக்கு அக்கம்பக்கமாக இருவரும் பூங்காவிற்குள் வந்தார்கள். கம்பீரமான மனிதர், அந்த பஞ்சாயத்தின் தலைவர். எம்.எல்.ஏ ஆகிவிடலாம் என்று இப்போதே பெரிய துண்டை முழங்கால் வரைக்கும்விட்டு, பழகிக் கொண்டிருப்பவர்; ‘ஏய்... இன்னுமா போகலே? சைதாப்பேட்டை ஆளுங்க தேவல போலுக்கே’ என்று அதட்டினார். சைதாப்பேட்டையில் குடியமர்த்தியிருக்கும் நரிக்குறவர்கள், சென்னை நகர சாவாச தோசத்தால், குரங்குகளைப் பிடிப்பதைவிட, மனிதர்களை பிடிப்பதால் அதிகபலன் ஏற்படுவதை உணர்ந்து, குரங்கு பிடிப்பை விட்டு விட்டபடியால், பஞ்சாயத்துத் தலைவர் ஆற்காட்டில் இருந்து, இந்த நரிக்குறவர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/34&oldid=1383328" இலிருந்து மீள்விக்கப்பட்டது