பக்கம்:காகித உறவு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

லாரி சிங்கி


கொண்டே அந்த கூண்டிற்குள் ஒடின. அதன் இரும்புக் கதவை மூடிவிட்டு, அவள் முதுகை நிமிர்த்தியபோது, செங்கோடனும், இன்னும் இரண்டு பேருமாக முதுகுகளைக் குனிந்து, எம்டியாகப் போன இரும்பு கூண்டைத் தூக்கினார்கள். இதரக் கிழக்குறவர்களும், குறத்திகளும் பரபரப்பாக அல்லது பஞ்சாயத்துத் தலைவர் அப்படி நினைக்க வேண்டும் என்பது போல, பம்பரமாகச் சுற்றிக்கொண்டு, மீண்டும் தத்தம் இடத்தில் தயாராக நின்றார்கள். குரங்குகள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை, சேடிஸ்டிக்காக ரசித்துக் கொண்டிருந்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் தன் சந்தேகத்தை வினாவாக்கினார்.

‘டேய் செங்கோடா... குரங்குக ஏண்டா - இப்படிச் சண்டை போடுதுங்க’

‘நம்ம பஞ்சாயத்துக் கூட்டத்தை... அடிக்கடி பார்த்திருக்கும். என்றார் தலைவர் பொடி வைத்து செங்கோடன் விளக்கினான்.

அதா சாமீ... கொரங்கோ. ‘கொம்பல்லோ’ பிட்சா. கலாட்டா இல்லே... இதுங்க... பலாப்பலா கொம்பல்லோ பிட்சது... அதான் கலோட்டா”

‘மன்ஷன்... தன்... ‘கொம்பல்லோ’ கலாட்டா பண்றான்... இன்னோர். கொம்பல்லோ. பயத்துலே. சொம்மா. இருக்கான். ஆனா. கொரங்கோ கொம்பல்லோ சொம்மா. வேற கொம்பல்லோ கலோட்டா...' என்றாள் வெள்ளைக் கோட்டுக்காரி.

‘ஏய்... லாரிச்சிங்கி...கொரங்கோ... சொம்மா இருக்க மாட்டே என்று செங்கோடன் மனைவியை அதட்டியபோது, குற்றாலக் குறவஞ்சில... சிங்கின்னு... படித்திருக்கோம். இது என்னடா... ‘லாரிச் சிங்கி’ என்றார் இன்னொரு உறுப்பினர். செங்கோடன் தன் மனைவியைப் பற்றி பேச்சுத் திரும்பியதில் கோபப்பட்டு, நின்றபோது, ஷோக்காடாள் விளக்கினாள்.

‘அதா... சாமி...இவளோட... அம்மா... ஆற்காட்ல... லாரி ஏறி.... திருவண்ணாமலைக்கு போச்சோ. இந்த கொரங்கு லாரிலே பொறந்ததுங்கோ... லாரிச்சிங்கின்னு வச்சோம்.’

குறவர்கள், உறுப்பினர்கள் முகத்தைப் பார்த்துப் பேசுவதால், தன் முகம் தன்னையறியாமலே எள்ளுங் கொள்ளுமாக, பஞ்சாயத்துத் தலைவர் லேசாக அதட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/36&oldid=1383341" இலிருந்து மீள்விக்கப்பட்டது