பக்கம்:காகித உறவு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

39


கைவிரல்களை சகாக்கள் வலுக்கட்டாயமாகப் பிரித்தபோது, எந்தத் துன்பம் ஏற்பட்டதோ அந்தத் துன்பம் இப்போதும் அவளுக்கு ஏற்பட்டது.

லாரிச்சிங்கி ஒரு முடிவுக்கு வந்தாள்.

குழந்தையை சற்று தொலைவில் வைத்துவிட்டு, ஒரு கம்பை எடுத்து, குட்டிக் குரங்கை லேசாகக் குத்தினாள். குட்டிக் குரங்கை, கூண்டு வாசல் பக்கமும் இதர குரங்குகளை வேறொரு முனைக்கும்கொண்டு போனாள். அவளை பயங்கரமாக நெருங்கிக் கொண்டு வந்த தாய்க் குரங்கைப் பற்றிக் கவலைப்படாமல் குட்டிக்குரங்கை கம்பால் அடித்தே, வாசல்பக்கம் வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்து, கட்டியிருந்த கதவை அவிழ்த்து, குட்டி மட்டும் தாயோடு சேரட்டும் என்று எண்ணிக் கொண்டே, லேசாகக் கதவைத் திறந்தாள். இதற்குள் பின்னால் வந்த தாய்க்குரங்கு, அவள் காலைக் கடித்ததால், நிலை குலைந்து அவள் திரும்பியபோது வாசல் கதவு முழுவதும் திறக்க, எல்லாக் குரங்களும் மனிதர்கள் பல்லவனுக்கு முண்டியடிப்பதுபோல் முண்டியடித்துக் கொண்டு ஓடின.

லாரிச் சிங்கி என்ன செய்வதென்று புரியாமல் குழம்பியபோது மேலே தெரிந்த மலைப்பகுதியில் நடப்பதை தற்செயலாகப் பார்த்த செங்கோடன், ஹே லாரிச்சிங்கி எதுக்கோ திறந்து... வாரேன்... வாரேன்...! என்று கத்த குறக்கோஷ்டி, கத்திக் கொண்டும், திட்டிக்கொண்டும், அங்கிருந்தே இவள்மீது அப்படியே குதிக்கப் போகிறவர்கள் போல், நெஞ்சை முன்னால் குவித்தும், முதுகை பின்னால் வளைத்தும் கத்திகளை ஆட்டிக்கொண்டும் வேல்கம்புகளை ஓங்கிக் கொண்டும் வந்தார்கள்.

லாரிச்சிங்கிக்கு விஷயம் புரிந்து விட்டது. கதவைத் திறந்த உண்மையைச் சொன்னால் உதைப்பார்கள். சொல்லாவிட்டால் பைத்தியம் பிடித்ததாய்க் கருதி பரிகாரம் தேடுவார்கள். பரிகாரம் உதைகளைவிட பயங்கரமானது. இது, குறைந்தபட்சக் கூலி விவகாரம், இருபது குரங்குகளுடையது எழுபது ரூபாய் விவகாரம். பொது விவகாரம். அல்லும் பகலும் பாடுபட்டதன் அத்தாட்சி விவகாரம். அதுமட்டுமல்ல. இனிமேல் இந்த ஆற்காட்டுக் குறவர்களை பஞ்சாயத்துத் தலைவர் கூப்பிடாமல் போகிற விவகாரம். இதர குறக்கோஷ்டிக்கு இளக்காரமாய்ப் போன விவகாரம். இந்த விவாகரங்களை கணக்கில் வைத்துப் பார்த்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/41&oldid=1383368" இலிருந்து மீள்விக்கப்பட்டது