பக்கம்:காகித உறவு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழை - ஆப்பிள் - நட்சத்திரம்


பிறந்த நாள் போஸ்டர்களைப்போல் அமர்க்களமாக விளம்பரம் செய்யப்பட்டு வரும், ‘எங்கள் தர்மம் சமதர்மம்’ என்ற அந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளுக்கு, ஸ்டுடியோவில் டைரக்டர், காமிராமேன், ஸ்டில்மேன் உட்பட வரத் தகுந்தவர்களும், தகாதவர்களுமாகப் பலர் இருந்தார்கள்.

காலை பத்து மணிக்கு ஷூட்டிங் ‘ஷெடுல்’ ஆகியிருந்தது. ஆனால் கதாநாயக நடிகர் கமலனையும் நாயகி நடிகை நளினி குமாரியையும், மணி 12 ஆகியும் இன்னும் காணோம்.

மூவி காமிரா கோணம் எட்ட முடியாத தூரத்தில் மூங்கில் பரணில் டும் லைட்டுகளோடு உட்கார்ந்திருந்த லைட் பாய்களும் கஷ்டப்பட்டார்கள். அவர்களால் ஷூட்டிங் முடியும் வரை கீழே இறங்க முடியாது. இதே போல், ஸெட்டில் ஒரு முனையில் பத்து மணி படப்பிடிப்பிற்கு அஸிஸ்டெண்ட் டைரக்டர் உத்திரவுப்படி எட்டு மணிக்கே வந்த ஐம்பது அறுபது துனை நடிக-நடிகைகளும் டைரக்டரே என்று உட்கார்ந்திருந்தார்கள்.

மேலே பரணியில் பத்தாம் நம்பர் டூம் லைட்டைக் கவனித்துக்கொண்டிருந்த லைட்பாய் நாராயணனின் உடம்பு வியர்த்தது. அவன் குழந்தைக்கு வலிப்பு அதற்கு மருந்து கொடுத்த ஒரு ஆர்.எம்.பி. டாக்டர் ஆஸ்பத்திரிக்குப் போனால்தான் குழந்தை பிழைக்கும் என்று கையை விரித்து விட்டார். லைட்டாய் கையில் ஒன்றும் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் தயாரிப்பாளர் கையைக் காலைப் பிடித்து...

திடீரென்று ஸெட்டில் ஒரு மயான அமைதி. தயாரிப்பாளர் உட்படத் துணை நடிக-நடிகைகள் அனைவரும் எழுந்து நின்றார்கள்.

கதாநாயாக நடிகர் கமலன் காரிலிருந்து இறங்கி உற்ற நண்பர் ஒருவர் முன்னால் வர, உயிர்த் தோழர் ஒருவர் பின்னால் வர, பத்திரிகை நிருபர் பக்கத்தில் வர, பந்தாவோடு வந்தார்.

“அவள் இன்னும் வரலியா?”

“நளினி குமாரி தானே. இதோ வந்துக்கிட்டே இருக்காங்க.” டைரக்டர் இழுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/43&oldid=1384254" இலிருந்து மீள்விக்கப்பட்டது