பக்கம்:காகித உறவு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

43



"நோ, தாங்ஸ், இப்போதான் ஐ.டி.ஓ. அண்ணன் வாங்கிக் கொடுத்தார்."

"நீங்க என்ன சொல்றீங்க? ஐ.டி.ஓ. அண்ணனா?” அந்த வாலிபன் கள்ளமின்றி சிரித்துக் கொண்டே 'ஐ.டி.ஒட்டக்கூத்தன் அண்ணன் தானே இந்த ’எங்கள் தர்மம் சமதர்மம்' படத்தைத் தயாரிக்கிறாங்க... எனக்கு ஷூட்டிங் பார்க்க ஆசை... நான் மதுரையில் எம்.ஏ. படிக்கிறேன்... ஐ.டி.ஒ. அனுப்பினதா சொல்லு ஸ்டுடியோவுக்குள் விடுவாங்கன்னு சொன்னாங்க" என்றான்.

ஈயாடாமல் இருந்த பெரிய புள்ளிகள் முகத்தில் கோபம் தாண்டவம் ஆடியது. துணை நடிகர் கூட்டம் தங்களுக்குள் சிரித்துக் கொண்டது.

ஐம்பது வயதைத் தாண்டிய ஆபீஸ்-பாய் ஆடலழகன் அவன் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் கூர்க்காவிடம் விட்டுவிட்டு, அந்தக் கூர்க்காவையும் திட்டிவிட்டு வந்தான். வெளியே கேட்டில் கூர்க்காவுக்கும் அந்த வாலிபனுக்கும் சண்டை நடந்துக் கொண்டிருந்தபோது, ஸெட்டில் ஷூட்டிங் ஆரம்பமாகத் துவங்கியது.

வசனகர்த்தா, கமலனிடம் ஸ்கிரிப்டைக் கொடுத்தார். டைரக்டர் ஸ்டார்ட் என்றார். பிறகு கிளாப் என்றார் உடனே புரடெக்‌ஷன் மானேஜர், டென்-ஏ-டேக் ஃபோர் என்றார். ஷூட்டிங் துவங்கியது. லைட் பாய்கள் டூம்களைப் பல கோணங்களில் துவக்கினார்கள்; மூவி காமிரா சுழன்றது.

கொத்து வேலை செய்யும் தொழிலாளி உழைத்த களைப்பில் உட்கார்ந்திருக்கிறான். அவன் முதலாளி, ஏண்டா சோமாறி!. நான் வரேன். கண்ணு தெரியலியா?. பெரிய மனுஷன் மாதிரி உட்கார்ந்திருக்கே என்கிறார்; உடனே அந்தத் தொழிலாளி கொதித்தெழுகிறான். “மூளைகெட்ட முதலாளியே! நான் உனக்கு அடிமையல்ல... தேவைக்குக் குறைவாய்க் கொடுத்து, சக்திக்கு அதிகமாக உழைக்க வைக்கும் உலுத்தனே!” என்று வசனத்தைப் பொழிந்து கொண்டிருந்த நடிகர் கமலன், திடீரென்று மீதி வசனத்தைப் பேசாமல் ஒரு துணை நடிகரைக் கோபமாகப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/45&oldid=1383366" இலிருந்து மீள்விக்கப்பட்டது