பக்கம்:காகித உறவு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஏழை - ஆப்பிள் - நட்சத்திரம்


பார்த்தார். அவன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்! விஷயத்தைப் புரிந்து கொண்ட அனுபவசாலியான டைரக்டர், கட்கட் என்று சொல்லிவிட்டுத் திரையுலகிற்குப் புதிய ஆசாமியான அந்தத் துணை நடிகரின் எச்சில் சிகரெட்டைப் பிடுங்கி, கீழே எறிந்தார். அஸிஸ்டெண்ட் டைரக்டர் அவனைக் கேட்டை நோக்கி இழுத்துக் கொண்டு போனார்.

அந்தக் காட்சி முடிந்து அடுத்த காட்சி துவங்கியது. நடிகை நளினிக்கு எழுத்துவாசம் தெரியாததால் அஸிஸ்டெண்ட் டைரக்டர் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

"நீங்க ஒரு ஏழைப் பொண்ணு. கொத்து வேலை செய்துகிட்டு இருக்கீங்க." என்று சொன்னபோது, புரொடக்‌ஷன் மானேஜர் ஒரு சின்னாளப்பட்டி புடவையை நீட்டினார். "வாட்... நான் சின்னாளப்பட்டி புடவையைக் கட்டுறதா?. நோ. நோ. ஃபாரின் நைலக்ஸ் கொண்டுவாங்க" என்றாள் நளினி. நடிகையின் மம்மி, என் பொண்னை என்ன நினைச்சிட்டீங்க? ஆயிரம் ரூபா புடவைக்குக் குறைஞ்சு அவள் கட்டினதே கிடையாது" என்றார்.

டைரக்டர் குழைந்தார் "ஒண்ணு சொல்றேன் கேளுங்க... அம்மா இந்த சேலையை சும்மா பத்து செகண்ட் கட்டட்டும். உடனே ஒரு ட்ரீம் காட்சி வச்சு. ஒரு பாட்டை வச்சுடறேன். 'உன்னைக் கண்டேன்' என்று பாடும்போது ஆகாய கலரில் ஒரு புடவை. ‘என்னைக் கண்டாய்’ என்று பாடும் போது ஆரஞ்சு கலரில் ஒரு புடவை. இருவரையும் அம்மா கண்டாள் என்கிற வரி பாடுறப்போ ஒரு வைர நெக்லஸ்... இப்படி விதவிதமாக ஜோடிச்சு சமாளிச்சுடறேன். ஆனால் பத்தே செகண்ட். இந்த சுங்கடி சாரியைக் கட்டடட்டும்." என்றார்.

‘ஐ ஆம் சாரி. இந்த சாரியை கட்டிக்க மாட்டேன். என் வேலைக்காரிகூட இதைக் கட்டிக்க மாட்டாள்’ என்றாள் நளினிகுமாரி.

டைரக்டர் சிந்தித்தார். பிறகு "ஆல்ரைட்... அந்தக் காட்சியே வேண்டாம்" என்றார் தீர்மானமாக உடனே புரொடக்‌ஷன் மானேஜர் துணை நடிகைகளிடம் பேசினார். கமலாவும் விமலாவும் தவிர, மற்றப் பொண்ணுங்க போயிடுங்க. நீங்க நடிக்க வேண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/46&oldid=1383377" இலிருந்து மீள்விக்கப்பட்டது