பக்கம்:காகித உறவு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

45


காட்சியை நீக்கிட்டோம் உங்களைத்தானே, போகமாட்டீங்க... போங்க! போயிடுங்க... அட! எருமை மாடு மாதிரி நிக்கிறதைப் பாரு போங்கன்னா போங்க..."

ஐந்து ரூபாய்க்காக ஐந்து மணி நேரம் காத்திருந்த துணை நடிகைகள் எழுந்து மலைத்துக் கலைந்தார்கள்.

டைரக்டர் ஸ்டார்ட் என்று சொல்வதற்காக உதடுகளை நீக்கினார்.

நளினிகுமாரி ஓர் ஆப்பிளை லேசாகக் கடித்துவிட்டுக் கீழே வைத்தாள்.

படப்பிடிப்பு துவங்கியது. கதாநாயகியும், அவள் தோழியும் பாட வேண்டும். அப்போது கதாநாயகன் வருவான் அதைப் பார்த்துத் தோழி ஒதுங்கிக் கொள்ள வேண்டும் உடனே டூயட். இதுதான் காட்சி.

டைரக்டர் "ஸ்டார்ட்" என்று சொல்லுகையில் காமிராமேன் ஒன் மினிட் என்று சொல்லிவிட்டு, லைட்கன்ட்ரோலர் காதை மைக் மாதிரி நினைத்து ஏதோ சொல்ல, கன்ட்ரோலரின் வாய் ஒலி பெருக்கியாகியது. "ஏய் எட்டாம் நம்பர்....டூம் லைட்டை ப்ரைட்டாக்கு. ஏய் ஒன்பது..டூமை டல்லாக்கு. ஏய் பத்து! நாராயணா! உன்னைத்தான் அட! உன்னைத்தாண்டா... லைட்டை லெப்டா திருப்பு. ஏய் பேமானி. எங்க பார்க்கிற. திருப்பு. திருப்பு. லெப்டுக்கா... லெப்டுகக்கா... ஏய்...ஏய்...!"

“ஐயோ!” லைட்பாய் நாராயணன் பரணிலிருந்து கீழே விழுந்தான். டூமைத் திருப்பும்போது நளினி கடித்துப் போட்டிருந்த அந்த ஆப்பிளைப் பார்த்ததால், குழந்தை நினைவு வரவே, கால் தவறிவிட்டது. அடித்துப்போட்ட அணில்போல் கீழே விழுந்தான். ஒரே ரத்தம். பரட்டைத் தலையை ரத்தம் நனைத்தது.

எல்லோரும் ஓடி வந்தார்கள். “பாழாய் போற பயல் விழுந்து படப்பிடிப்பைக் கெடுத்திட்டானே... ஏய் கார்! காரை எடு... கார் எங்கே?” டைரக்டர் கத்தினார்.

"காரா. ஆபீஸ் காரா...... அம்மா நாயை ஏத்திக்கிட்டு வெட்னரி டாக்டர்கிட்டே போயிருக்கு..."

"அப்படியா! ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணு."

கமலனின் சவர்லட் காரையோ, நளினியின் இம்பாலா வையோ கேட்க யாருக்கும் தைரியம் வரவில்லை. லைட்டாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/47&oldid=1383390" இலிருந்து மீள்விக்கப்பட்டது