பக்கம்:காகித உறவு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ஏழை - ஆப்பிள் - நட்சத்திரம்


நாராயணன் நாய் கவ்வி உதறிய நண்டு போல் துடித்தான். நடிகை நளினி குமாரியும், கமலனும் தங்கள் இடத்தில் வந்து அமர்ந்தார்கள்.

திடீரென்று நளினிகுமாரியின் அம்மா கூப்பாடு போட்டாள். "ஐயையோ.. என் பொண்ணைப் பாருங்களேன்! அவள் முகத்தில் வேர்த்திருக்கே அவளுக்கு ரத்தத்தைப் பார்த்தால் ஆகாதே அவள் உடம்பு ஆடுதே! ஐயையோ!'

நளினி குமாரி பொங்கி வந்த வேர்வையைக் கைக்குட்டையால் ஒற்றிக் கொண்டே சிணுங்கினாள்.

லைட்பாயைச் சுற்றி நின்ற கூட்டம் நளினியை நோக்கி ஒடி வந்தது. "ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்லை", என்று சொன்னதைப் பொருட்படுத்தாமல், "நோ, நோ, நீங்க ட்ரீட்மெண்ட் எடுத்துக்கணும்" என்று சொல்லிவிட்டு, நடிகர் கமலன், அவளை அனைத்தவாறு தம் காரில் ஏற்றிக் கொண்டு பறந்தார். நடிகையின் அம்மாக்காரியும், படத்தயாரிப்பாளர், டைரக்டர் முதலியவர்களும் இன்னொரு காரில் ஏறிபின்னார் போனார்கள். லைட்பாய் நாராயணனைச் சுற்றி நின்றவர்கள் ஆம்புலன்ஸ் வண்டியை எதிர்பார்த்து நின்றார்கள்.

ஒரு வழியாக எங்கள் தர்மம் சமதர்மம் வெளியாயிற்று. வெற்றிகரமாக ஓடுகிறது. சோஷலிஸத்தை விளக்கும் இந்தப் படத்தை ஒரு மகத்தான சித்திரம் என்று எல்லோரும் பாராட்டினார்கள். மனிதர்களுக்குள் பேதமில்லை என்ற சித்தாந்தத்தை விளக்கும் தத்துவப்படம் என்று பாமாலை சூட்டினார்கள். நடிகர் கமலனுக்கு "சோஷலிஸம் கொண்டான்' என்று நளினி குமாரிக்கு சோஷலிஸத்தின் தலைமகள் என்றும், டைரக்டருக்கு "சோஷலிஸ் திலகம்" என்று கலையன்பர்கள் பட்டம் சூட்டினார்கள்.

தனக்கு விடிவு காலம் பிறக்காதா என்று "லைட்பாய்' நாராயணன் ஆஸ்பத்திரியில் ஏங்கிக் கொண்டிருக்கிறான். முறிந்திருந்த அவன் தொடை எலும்பிற்குப் பிளாஸ்திரி போட்டு அந்தக் காலை மேலே தூக்கி, நாலடி உயரத்தில் ஒரு 'ஸ்லிங்கில்' வைத்திருக்கிறார்கள்.

***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/48&oldid=1383540" இலிருந்து மீள்விக்கப்பட்டது