பக்கம்:காகித உறவு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

49


மற்ற நாட்களில் லோகல் விடுமுறைகள் அதிகமாய் வச்சிட்டார். இப்போ நான் யூனிவர்சிட்டி பெர்மிஷன் இல்லாமல் விடுமுறை விடமுடியாது. யூனிவர்சிட்டிலேயும் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்க. ஏன்னா கல்லூரி இத்தனை நாட்களுக்கு நடந்தாக வேணுமுன்னு ஒரு விதி இருக்கு. அதனாலதான்...'

கோபாலுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. விதியை மாற்றத்தானே அவன் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்?

எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. இனிமேல் சனிக்கிழமை கல்லூரி நடக்கக் கூடாது. -

கோபால்... ப்ளீஸ்... நான் சொல்றதைக் கேளு. இப்போ நாம் ஒண்னும் பண்ணமுடியாது. அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நிச்சயமாய் சனிக்கிழமைகளை விடுமுறையாய் ஆக்கிடுறேன். தயவு செய்து, என் பிளேஸில் இருந்து பாரு. அப்போ ஒனக்குப் புரியும்.'

ஒங்க வேலையைவிட எனக்கு நல்ல வேலை கிடைக்கும் சார்...'

கோபால் இப்படிச் சொன்னதும், வராண்டாவில் இருந்து முதல்வர் அறைக்குள் வந்துவிட்ட மாணவர்கள், கொல்லென்று சிரித்தார்கள். 'வெல் செட்' என்று விசிலடித்தார்கள்.

"இந்த 'சனிப்' பிரச்னையை உடனே தீர்த்திடுவேன். மனமிருந்தால் மார்க்கமுண்டு சார் என்று ராமு முடித்தான்.

நீயே ஒரு மார்க்கத்தைச் சொல்லுப்பா என்றார் முதல்வர்; பரீட்சையில் மார்க்கே வாங்காத அந்த ராமுவைப் பார்த்து, கோபால் இடைமறித்தான். செயலாளரை அதிமாய்ப் பேசவிடலாமா? கூடாது. அவன் அவனைப் பேச விடாமல், தான் மட்டும் விடாமலும், விட்டுக் கொடுக்காமலும் பேசினான்.

'ஸார்' சனிக்கிழமை தோறும் நாங்களே வராமல் இருக்க எங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது. ஒரு மரியாதைக்காக ஒங்களிடம் கேட்டோம். மரியாதையை காப்பாற்றிக்க வேண்டியது. இனிமேல் உங்கள் பொறுப்பு.'

முதல்வர் மரியாதையாகவே பதில் அளித்தார் : என்னால் முடிந்தால் விடாமல் இருப்பேனா? யுனிவர்சிட்டியில் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்க... அதனாலதான்."

கா.4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/51&oldid=1383565" இலிருந்து மீள்விக்கப்பட்டது