பக்கம்:காகித உறவு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

59



ஒட்டுப்போட்ட அன்ட்ராயருக்குள்ளே கால்களையும் ஏதோ ஒரு 'காடி'த்துணிச் சட்டைக்குள் கைகளையும் விட்டுக் கொண்டு நின்ற முனுசாமி, மிஸஸ் வளர்மதி ஏன் தன்னைக் கோபமாகப் பார்க்கிறாள் என்று புரியாமல், அதே சமயம், அந்தப் பார்வைக்குப் பயந்தவன் போல், பால்கனியைத் தாங்கிப் பிடிக்கும் ஒரு தூணுக்கருகே மறைய முயற்சி செய்தான்.

அவனுக்கு ஒரே ஆச்சரியம். நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் அந்தப் பையனை - குமாரை அதிசயமாகப் பார்த்தான். கையில் மினுங்கும் கடிகாரம்; கழுத்தில் டாலர் செயின்; கண்ணைக் கூசவைக்கும் சட்டை, வைர மோதிரம், இவை போதாதென்று பலர் கண்ணைக் கவரும் பார்சல்களில் இருந்து பிரித்து எடுத்துக் கொண்டிருக்க பொம்மைகள், கஸ்டம்ஸில் இருந்து வந்த துணிகள் ஆகியவற்றை, கீழே விழப் போவதுபோல் தோன்றிய, தன் அன்டிரரயரைக் கைகளால் தூக்கிப்பிடித்துக் கொண்டே கண்களைக் குமார் மீது நிறுத்தினான்.

இதற்குள் படகுக்கார் ஒன்றில் இருந்து ஒரு இளம் பெண்ணும், அவளின் ஆண் சோடியும் இறங்கினார்கள். ஒரு அழகான பார்சலை வைத்துக்கொண்டு அந்த நங்கை சிரித்தவாறு வந்தபோது குமார், 'குட்மார்னிங் ஆன்டி' என்றான்.

'ஆன்டிக்கும்' அவனிடம் விளையாட ஆசை.

'குட்மார்னிங் டியர். கமாண்ட் டெல்மா...ஒட் இஸ் இன்ஸைட் தி பார்சல்?

"சாக்லேட்'

'இல்லே. டோன்ட் பி. ஏ கிளட்டன்."

'ஷர்ட்!

'நோ.'

'டாய்’

'நோ. நோ...'

"யூ டெல்'.

நோ... யூ சுட்... டெல் யுவர் திங்.'

குமார் யோசித்தான். பிறகு 'டாலர் செயின்' என்றான். ஆன்டி, கையைத் துக்கி 'ஸ்ரண்டர்' என்றாள். உடனே எல்லோரும் சிரித்தார்கள். "குமார் இஸ் ஏ பிரில்யெண்ட் பாய்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/61&oldid=1383297" இலிருந்து மீள்விக்கப்பட்டது