பக்கம்:காகித உறவு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பிறக்காத நாட்கள்



என்று ஒருத்தி சொன்னபோது, மிஸ்டர் நாகராசன் 'லைக் ஹிஸ் டாடி' என்றார். உடனே மிஸஸ் நாகராசன் "நோபடி வில் பிலிவ்." என்று சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். ஆன்டிக்காரி பார்சலைப் பிரித்தாள். அதற்குள் ஒரு பார்சல், அதைப் பிரித்தால் இன்னொரு பார்சல், கடைசியில் ஒரு ஆறுபவுன் டாலர் செயின் கிடைத்தது. இவ்வளவு பெரிய பார்சலுக்குள் ஒரு சின்னத் தங்கச் செயின் இருப்பதைக் கண்டுபிடித்த குமாரின் இன்டலிஜென்சியை எல்லோரும் பாராட்டிச் சிரித்தபோது, ஒருவர்.பின் ஒருவராக, கார்களிலும் ஸ்கூட்டர்களிலும் வந்து கொண்டிருந்த 'சிட்டி எலைட்கள்' குமாருக்கு தந்தப் பிள்ளையார், செஸ்போர்ட், 'சிங்கிப் பொம்மை' போன்ற சாமான்களை அவனிடம் காட்டி, அவன் அம்மாவிடம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தூண் மறைவில் பாதி உடம்பை மறைத்துக் கொண்டிருந்த முனுசாமிக்கும் குமாருக்கு ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும் என்று ஆசை. இந்த குமாரையும் அவன் இங்கிலீஸையும் பார்த்து, கேட்டு, ரசிக்கும் இந்தக் கார்ப்பரேஷன் பள்ளிப்பையன் அவனை ஒரு செளக்கியதாருக்குரிய பெளவியத்துடன் பார்ப்பான். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ் ஆகிவிடுவான் என்று இப்போதே அனுமானிக்கப் பட்டிருக்கும் குமாரும், தன் வயது ஏழைச் சிறுவர்களை, அறிந்தோ அல்லது அப்பா அம்மாவால் அறிவுறுத்தப்பட்டோ கம்பீரமாகத்தான் பார்ப்பான். ஒரு தடவை குடிசைப் பையன் கொடுத்த சாக்லேட்டை வாங்கியதற்காக, பெற்றோரிடம் முதல் முறையாக அடிபட்டிருந்தான். இதனால் ஏழைப் பையன்களிடம் பழகுவதற்கு அதுவே கடைசித் தடவையாயிருந்தது.

குமாரை, ஆச்சரியமாகப் பார்த்த முனுசாமி தானும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்பதற்காக, லேசாக நகர்ந்தான்; நடந்தான். பின்னர் ஒடிப்போய் நேற்றிரவு தம்பியிடம் திருடியிருந்த ஒரு நிலக்கடலை மிட்டாயை எடுத்து அதில் படிந்திருந்த துளசியை வாயால் ஊதிவிட்டு குமாரின் கைக்குள் திணித்தான். எதிர்பாராத இந்நிகழ்ச்சியை மற்றவர்கள் ஆதங்கத்துடன் பார்த்தபோது, குமார் அந்த மிட்டாயைத் துக்கி வீசி எறிந்துகொண்டே 'டர்ட்டி ஃபெல்லோ. கிவ்விங் டர்ட்டி திங்' என்று சொல்லிவிட்டு அப்பாவைப் பெருமையோடு பார்த்தான். எநத தெருப்பிள்ளையாண்டானாவது எதையாவது கொடுத்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/62&oldid=1383299" இலிருந்து மீள்விக்கப்பட்டது